கம்பராமாயணம் 4953 · சுந்தர 3.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அளக்க - அளந்துகாண்பதற்கு; அரிது ஆகிய - கடினமாக உள்ள; கணக்கொடு - கூட்டத்துடன்; அயல் நிற்கும் - பக்கத்தே நிற்கின்ற, விளக்கு இனம் - விளக்குக் கூட்டம்; இருட்டினை விழுங்கி - இருளை உட்கொண்டு; ஒளிகால - வெளிச்சத்தை வெளிப்படுத்த (அதனால்); கடிய உளக்காலன் - கடினமான உள்ளமுடைய யமனின்; மனம்உட்கும்- மனமும் பயப்படும்படியான; மணிவாயில் - மணிகள் பதிக்கப் பெற்ற கோபுரவாயிலின் கண் உள்ள; இளக்கம் இல் - தளர்ச்சியில்லாத; கடற்படை இருக்கையை - கடல்போன்ற படைகளின் இருப்பிடத்தை, எதிர்ந்தான் - எதிரே கண்டான்.
இரவினில் வந்து உயிர்க்குலத்தினை அழிக்கும் காலன் ஒளி வாயிலைக் கண்டு அஞ்சினான் போலும் (பாரதி தந்த பிச்சை) சந்திரன் கீழ் வானில் இருப்பதால் நகரில் இருள் சூழ்ந்தது. அதனால் விளக்கு இருளை விழுங்கிற்று என்றார் கவிச்சக்கரவர்த்தி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With multitudes beyond all reckoning standing alongside,
- and hosts of lamps swallowing the darkness and pouring out light,
- at the jewelled gateway that makes even hard-hearted Death quail within,
- he faced the camp of the unflagging, sea-like army.
What the poem says
At the jewelled gateway Aṉumaṉ sees the encampment of the guard, an army as vast as the sea. Countless lamps beside it swallow up the darkness and blaze with light.
Even Death, who is hard of heart and does his work in the dark, would be frightened by such a brightly lit gate. The commentary explains that the moon was still low in the east, so the city was dark and the lamps "swallowed" the night.