கம்பராமாயணம் 4955 · சுந்தர 3.73

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கருங்கடல் கடப்பது அரிது அன்று : இநகர் காவல்
பெருங்கடல் கடப்பது அரிது! எண்ணம் இறை பேரின்
அருங்கடன் முடிப்பது அரிதாம்! அமர் கிடைப்பின்
நெருங்கு அடல் விளைப்பர் நெடுநாள்! 'என நினைந்தான்.

பொருள் · Meaning in Tamil

கருங்கடல் கடப்பது - ஆழமான கடலைத் தாண்டுவது; அரிது அன்று- பெருஞ்செயல் அன்று; நகர்- நகரிலே அமைந்த; காவல் பெருங்கடல் - காவலாகிய பெரிய கடலை; கடப்பது அரிது - கடந்து செல்வது பெருஞ்செயல்; எண்ணம் - என்னுடைய ஆலோசனை (உணர்வின் வயப்பட்டு); இறை பேரின் - சிறிது பிறழ்ந்தால்; அருங்கடன் - பிராட்டியைக் காண்பதாகிய கடமையை; முடிப்பது அரிது ஆம் - நிறைவேற்றுதல் முடியாமல்போம்; அமர் கிடைக்கின் - (இவர்கட்கு) போர் செய்யும் வாய்ப்புக் கிட்டினால்; நெடுநாள் - பலமாதங்கள்; நெருங்கு அமர் விளைப்பர்- செறிவான போரை வளர்ப்பார்கள்; என நினைந்தான் - என்று (அனுமன் சிந்தித்தான்.

அனுமன் வீரன் ஆகையால் பகைவரைக் கண்டதும் உணர்ச்சி வயப்பட்டான். நிலைதெரிந்து அடங்கினான்.

ஆழக் கடல் கருமைநிறம் பெறும். ஆதலின் கருங்கடல் என்பதற்கு ஆழமான கடல் என்று கூறப்பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Crossing the dark sea was not so hard; to cross the great sea
  2. of the city's guard is hard! If my judgement slips even a little,
  3. the hard task will be hard to accomplish! If they get a fight,
  4. they will carry on close combat for many days!' so he thought.

What the poem says

Aṉumaṉ's warrior blood stirs at the sight of the enemy, but he controls himself. Leaping the ocean was nothing, he thinks, compared with getting past this ocean of guards.

If he lets his feelings get the better of his judgement and starts a fight, the demons will keep him at it for months. Then his real duty, finding Cītai, would never be done. The ocean is "dark" because it is deep.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'karuṅkaṭal kaṭappatu aritu aṉṟu: nakar kāvaṟ
peruṅkaṭal kaṭappatu aritu! eṇṇam iṟai pēriṉ
aruṅkaṭaṉ muṭippatu aritu ām! amar kiṭaikkiṉ
neruṅku amar viḷaippar neṭunāḷ! 'eṉa niṉaintāṉ.