கம்பராமாயணம் 4957 · சுந்தர 3.75

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அவ்வமயத்தில்)

நாள் நாளும் - தினந்தோறும், தான் - தன்னால்; காவல் நல்கிய - பாதுகாப்பு வழங்கப்பெற்ற; நனி மூதூர் - மிகப் பழமையான இலங்கையின்; வாழ்நாள் அன்னாள் - ஆயுட்காலம் போன்றவளும்; சுடரோனை - ஒளிவீசுகின்ற சூரியனை; காணா வந்த - கண்டு விழுங்குவதற்கு வந்த; கட் செவி என்ன - பாம்பைப் போல; கனல் கண்ணாள் - நெருப்பைக்கக்கும் கண்களையுடையவளும்; தூணாம் என்னும் - தூணே நிகராகும் என்று கூறத்தக்க; தோள் உடையானை - தோள்களைப் பெற்ற அனுமன்; போவதின் வழி மேலே - செல்லும் வழியின் கண்ணே; நின்றாள் (மறித்து) - நிற்பவளும்.

தோளுடையானை - ஐ- சாரியை இரண்டன் உருபு அன்று யாவும் சூனியம், சத்து எதிர் - என்று கூற வேண்டியதை “யாவையும் சூனியம் சத்து எதிர்” என்றார் மெய்கண்டார். பாடிய காரர் இரண்டன் உருபு விரியாமையைக் கண்டு தெளிக. மலைப் பாம்புபோல் ஐ பாட்டிலுள்ளது. இரண்டன் உருபு என்று கருதிப் பாடபேதம் செய்தவர் உளர் மா- மா-விளம் - மா- காய் என்னும் சீர்களை முறையே பெற்றுவரும் இந்த யாப்பை வடநூலார் 'மத்தமயூரம்' என்பர் இத்தகைய பாடல்கள் இந்நூலுள் 154 உள்ளன (மணிமலர் 76)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She who day after day kept guard, the very
  2. life-span of the ancient city, blocked his path as he went —
  3. him with arms like pillars — like the serpent that comes
  4. to seize the blazing Sun, she of fiery eyes.

What the poem says

Now the guardian goddess of Ilaṅkai appears. She has protected the city every day and is, in effect, its life: the city will stand as long as she does.

She plants herself in the path of Aṉumaṉ, whose arms are like pillars. Her eyes blaze like those of the eclipse serpent that comes to swallow the sun. A new metre begins here.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāḷnāḷum tāṉ nalkiya kāval, naṉi mūtūr
vāḻnāḷ aṉṉāḷ, pōvatiṉ, mēlē vaḻiniṉṟāḷ,
tūṇām eṉṉum tōḷ uṭaiyāṉaic, cuṭarōṉaik
kāṇā vanta kaṭ cevi eṉṉak kaṉal kaṇṇāḷ.