கம்பராமாயணம் 4958 · சுந்தர 3.76

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எட்டுத் தோளாள், நாலு முகத்தாள், உலகு ஏழும்
தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள், சுழல் கண்ணாள்,
முட்டிப் போரின் மூவுலகத்தை முதலோடும்
கட்டிச் சீறும் காலன் வலத்தாள், கமை இல்லாள்.

பொருள் · Meaning in Tamil

எட்டுத் தோளாள்- எட்டுத்தோள்களையுடையவளும்; நாலு முகத்தாள் - நான்கு முகத்தையுடையவளும்; உலகு ஏழும் - ஏழு உலகத்தையும்; தொட்டுப் பேரும் - தீண்டி, அதற்கு மேலும் செல்கின்ற; சோதி - ஒளியைப் பெற்ற; நிறத்தாள் - மார்பை உடையவளும்; சுழல் கண்ணாள் - எல்லாப் பக்கத்திலும் சுழல்கின்ற கண்களையுடையவளும், முட்டிப் போரில் - முட்டி யுத்தத்தில்; மூ உலகத்தை - மூன்று உலகங்களையும்; முதலோடும் கட்டி - உயிருடன் பிணித்து; சீறும் - கோபிக்கின்ற; காலன் வலத்தாள் - யமனின் வன்மையுடையவளும்; கமை இல்லாள் - பொறுமையற்றவளும்.

எட்டுத்தோள் முதலானவற்றைப் பெற்றவள் முட்டிப்போர் - முட்டியுத்தம் - இப்போரில் எதிரியைப் பிளத்தல் கண்கூடு. அவள் வலிமை - காலன் வலிமை. முதல் - ஆன்மா.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Eight-armed, four-faced, with a radiant breast
  2. that touched the seven worlds and went beyond, with rolling eyes,
  3. with the might of Death, who in close combat binds
  4. the three worlds, life and all, and rages — she knew no forbearance.

What the poem says

A description of the guardian goddess of Ilaṅkai. She has eight arms and four faces, and her shining body is so huge that it reaches past the seven worlds. Her eyes roll in every direction.

She has the strength of Death himself, who could fight the three worlds hand to hand and bind them, souls and all. She has no patience at all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṭṭut tōḷāḷ, nālu mukattāḷ, ulaku ēḻum
toṭṭup pērum cōti niṟattāḷ, cuḻal kaṇṇāḷ,
muṭṭip pōril mūvulakattai mutalōṭum
kaṭṭic cīṟum kālaṉ valattāḷ, kamai illāḷ.