கம்பராமாயணம் 4959 · சுந்தர 3.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அவள்)
அப்பால் - நீண்ட தூரத்துக்கு அப்புறத்திலே; பலர் வாரா நின்றாரோ- பலர் வந்து கொண்டிருக்கிறார்களோ; என - என்று ஐயங்கொண்டு; எண்திசை தோறும் - எட்டுத் திக்குகளிலும்; பாரா நின்றாள் - நோக்கியவண்ணம் இருப்பவளும்; மாரி மழையே போல் - கார்கால மேகம் போல், ஆரா நின்றாள் - முழங்கி நிற்பவளும்; அச்சம் தரு - பகைவர்களுக்கு அச்சத்தை விளைவிக்கும், நூபுரம் தாளாள் - சிலம்பணிந்த பாதத்தையுடையவளும்; வேரா நின்றாள் - கோபித்து நிற்பவளும்; இமைக்கும் மின்னின் - இமைக்கின்ற மின்னலைப் போல; மிளிர் பூணாள் - ஒளிவிடுகின்ற ஆபரணம் அணிந்தவளும்.
நின்றாள், முதலானவை, இயல்பைக் காட்டி நின்றன. வேரா நின்றாள் இதிலுள்ள வேரா - சினத்தைக் காட்டும். இமைத்தல் - இடையிட்டுத் தோன்றுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She kept scanning all eight quarters, as if wondering
- whether many were coming from beyond; like the monsoon rain-clouds
- she kept roaring, her feet with anklets that struck terror;
- she kept seething with rage, her bright ornaments flashing like lightning.
What the poem says
The goddess is always on the alert. She scans every direction in case enemies are approaching from far away, and she thunders like a monsoon cloud.
Her anklets frighten all who hear them, she simmers with anger, and her jewels flash like lightning. The repeated "kept" describes her settled nature.