கம்பராமாயணம் 4960 · சுந்தர 3.78

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வேல், வாள், சூலம், வெம்கதை, பாசம், மிளிர்சங்கம்,
கோல், வாள், சாபம், கொண்ட கரத்தாள், வடகுன்றம்
போல்வாள், திங்கட் போழின் எயிற்றாள், புகை வாயில்
கால்வாள், காணில் காலனும் உட்கும் கதம் மிக்காள்.

பொருள் · Meaning in Tamil

வேல் வாள் சூலம்- வேலும் வாளும் சூலமும்; வெங்கதை பாசம் - கொடிய கதையும், பாசமும்; விளி சங்கம் - சேனைகளை அழைக்கின்ற சங்கும்; கோல் வாள் சாபம் - அம்பும் கொடிய வில்லும்; கொண்ட கரத்தாள் - ஏந்திய கையையுடையவளும்; வடகுன்றம் போல்வாள் - மேருமலையை ஒத்தவளும்; திங்கள் போழின் - சந்திரனின் பிளவைப் போன்ற; எயிற்றாள் -பற்களையுடையவளும்; வாயில் புகை கால்வாள் - வாயில் புகையைக்கக்குபவளும்; காணின் - உற்றுப் பார்ப்பாளாயின்; காலனும் உட்கும் - யமனும் பயப்படும்; கதம் மிக்காள் - கோபம் மிக்கவளும். வாள் இருமுறை இக்கவிதையில் காட்சி தருகிறது. இரண்டாம் வாள் கொடுமை எனும் பொருள் தருகிறது. கோல் 'தோல்' என்ற பாடம் ஒரு பிரதியில் காணப்படுகிறது. தோல் - கேடயம், இப்பாடம் சிறக்கும்போலும்.

போழ் - பிளவு. திங்கட்பிளவு - பிறைச்சந்திரன். காணில் - எமன் செயலாக்கினும் அமையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Spear, sword, trident, cruel mace, noose, summoning conch,
  2. arrows and a fierce bow she held in her hands; like the northern mountain
  3. she was, with fangs like slivers of the moon, breathing smoke
  4. from her mouth; such wrath was hers that Death himself would quail to see her.

What the poem says

Her many hands hold spear, sword, trident, mace, noose, a conch for summoning troops, and bow and arrows. She is as huge as Mount Mēru in the north. Her fangs curve like crescent moons, and smoke pours from her mouth.

Even Death would be afraid to see how angry she is. The commentary notes a manuscript reading "shield" for "arrows", which it prefers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēl, vāḷ, cūlam, veṅkatai, pācam, viḷicaṅkam,
kōl, vāḷ, cāpam, koṇṭa karattāḷ, vaṭakuṉṟam
pōlvāḷ, tiṅkaḷ pōḻiṉ eyiṟṟāḷ, pukai vāyil
kālvāḷ, kāṇiṉ kālaṉum uṭkum katam mikkāḷ.