கம்பராமாயணம் 4961 · சுந்தர 3.79

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அஞ்சு வணத்தின்- ஐந்து நிறங்களைப் பெற்ற; ஆடை உடுத்தாள் - சேலையை அணிந்தவளும்; அரவு எல்லாம் அஞ்சும் - எல்லாப் பாம்புகளும் பயப்படும்படியான; உவணத்தின்- கருடனைப் போல; வேகம் மிகுத்தாள் - மிக்க வேகம் உடையவளும்; அருள் இல்லாள் - கருணையற்றவளும், அம் - அழகிய; சுவணத்தின் உத்தரியத்தாள் - பொன் இழையால் அமையப்பெற்ற மேலாக்கையுடையவளும்; அம் - நீர் நிரம்பிய; சுவள் நத்தின் - அழகாக ஒளி பொருந்திய சங்கிற்பிறந்த; முத்து ஒளிர் - முத்து விளங்கும்; ஆரத்து அணி கொண்டாள் - ஆரங்களால் அழகு பெற்றவளும். சுவணத்தின் முத்து- சுவணதேய முத்து என்று வரத நஞ்சையப்பர் கூறுவார் - சுவர்ண தேயம், இலங்கை போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She was clad in a garment of five colours; the speed of Garuḍa, whom all serpents
  2. fear, she surpassed; she was without mercy;
  3. she wore an upper cloth of lovely gold, and from the wave-filled waters
  4. she took her adornment: strings bright with pearls from fine, shining conches.

What the poem says

The guardian goddess's dress is described in a verse full of wordplay: each line begins with nearly the same syllables, divided differently to give different meanings.

She wears a five-coloured sari and an upper cloth woven with gold. She moves faster than Garuḍa, the eagle feared by all snakes, and she knows no pity. Her necklaces are strung with pearls from the conches of the sea. One older commentator takes the pearls to be from Suvarṇa, the "golden land", perhaps Lanka itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1añcu vaṇattiṉ āṭai uṭuttāḷ, aravu ellām
añcu uvaṇattiṉ vēkam mikuttāḷ, aruḷ illāḷ,
am cuvaṇattiṉ uttariyattāḷ, alaiyārum
am cu vaḷ nattiṉ muttu oḷir ārattu aṇikoṇṭāḷ.