கம்பராமாயணம் 4962 · சுந்தர 3.80

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள், தெளிநூல் யாழ்
அம் தாரத்தின் நேர்வரு சொல்லாள், அறை தும்பி
கந்தாரத்தின் இன் இசை பன்னிக் களிகூரும்
மந்தாரத்தின் மாலை அலம்பு மகுடத்தாள்.

பொருள் · Meaning in Tamil

சிந்து ஆரத்தின்- கடலில் தோன்றிய முத்துக்களால் ஆன; செச்சை அணிந்தாள் - சட்டை தரித்தவளும்; நூல் தெளி - நூல்களால் சிறந்தது என்று முடிவு பண்ணிய; யாழ் - யாழின்கண் தோன்றிய; அம்தாரத்தின் - அழகிய 'தாரம்' என்னும் சுரத்தை; நேர் வரு சொல்லாள் - ஒத்திருக்கும் சொல்லையுடையவளும்; அறை தும்பி - தேனுண்டு இசைபாடும் வண்டுக்கூட்டங்கள்; இன் - இனிய; கந்தாரத்து இசை - காந்தாரம் என்னும் பண்ணை; பன்னி - (பண்ணி) பாடி, களிகூரும் - மகிழ்ச்சியடையும்; மந்தாரத்தின் - மந்தார மலர்களால் கட்டப்பெற்ற; மாலை அலம்பும் - மாலை அசைகின்ற, மகுடத்தாள் - கிரீடத்தை அணிந்தவளும்.

இன் இசை பண்ணி- இனிய இசையைப் பாடி மாலை மருதம் பண்ணி, காலை -- 'செவ்வழி பண்ணி' என்றும் (புறம் /49) 'யாழோர் மருதம் பண்ண' என்றும் (மதுரைக் 658) பெருக வந்த வழக்கு அருகின. பன்னி - என்று மாற்றப் பெற்றது. ஒரு ஏடு (25) பண்ணி என்னும் பாடத்தை வழங்கிற்று, வாழ்க.

இப்பாடலின் பின்னிரண்டு அடிகளோடு சீவகசிந்தாமணியுள் “மந்தார மாலை மலர் வேய்ந்து தீந்தேன், கந்தாரஞ் செய்து களிவண்டு முரன்று பாட (சிந.1959) என்னும் அடிகளையும் களிவண்டு மந்தார மாலையின் மலரை மொய்த்து அதிற்றேனை உண்டு மகிழ்ந்து காந்தாரம் என்னும் பண்ணையாக்கி ஆளாபனஞ் செய்து பாடும்படி என வரும் உரைப் பகுதியையும் ஒப்பிடுக. (அண்- பல்கலை - கழ - பதிப்பு)

அமைவண்டு -பெரும்பான்மையான பாடம், அமை-அழகு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She wore a bodice of sea-born pearls; her speech matched the lovely
  2. high note of the harp extolled in clear treatises; humming bees
  3. sing sweetly the kantāram melody and revel
  4. in the mandāra garlands swaying on her crown.

What the poem says

More of the goddess's finery, again with echoing sounds at the start of each line. She wears a jacket of sea pearls. Her voice is like the high note (tāram) of a well-tuned harp.

Her crown is hung with garlands of mandāra flowers, where bees drink the nectar and hum the melody called kantāram. The commentary compares a similar passage in the Cīvakacintāmaṇi.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cintu ārattiṉ ceccai aṇintāḷ, teḷinūl yāḻ
am tārattiṉ nērvaru collāḷ, aṟai tumpi
kantārattiṉ iṉ icai paṉṉik kaḷikūrum
mantārattiṉ mālai alampum makuṭattāḷ.