கம்பராமாயணம் 4964 · சுந்தர 3.82

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொங்கு அழல் என்ன - மூண்டு எரிகின்ற நெருப்பைப் போல; புகை கண்ணாள் - புகையும் கண்களையுடைய இலங்கைத்தேவி; (அனுமனை நோக்கி) அறிவு இல்லாய் - அறிவற்ற பேதையே; ஆகா செய்தாய் - செய்யத் தகாதவற்றைப் புரிந்தாய்; அஞ்சலை - நீ சிறிதும் பயப்படவில்லை; சாகா மூலம் தின்று - இலைகளையும் கிழங்குகளையும் தின்று; உழல்வார் மேல் - திரிகின்ற அற்பக்குரங்குகள் மேல்; சலம் என்னாம் - கோபம் கொள்வதால் என்ன பயன்; பாகு ஆர் - சுண்ணக்குழம்பு பூசப்பெற்ற; இஞ்சிப் பொன்மதில் - கோட்டையொடு கூடிய மதிலை; தாவிப் பகையாதே- கடந்து சென்று (என்னுடன் பகைத்துக் கொள்ளாதே; போகாய் - ஓடிப்போவாயாக, என்றாள் - என்று கூறினாள்.

சாகம் - இலை. அருந்தவத்தின் சாகம் தழைத்து (கம்ப. 1671) பகையாதே போகாய் - பகையாமல் செல்க, என்றும் கூறலாம். பகையாதே என்பது ஏவலாகவும் எதிர் மறைப் பெயர் எச்சமாகவும் வரும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You have done what should not be done! It seems you have no fear, witless one!
  2. Why waste anger on those who wander about eating leaves and roots?
  3. Do not make an enemy of me by leaping this golden wall bright with lime!
  4. Begone!' she said, her eyes smoking like a blazing fire.

What the poem says

The goddess speaks with contempt. A monkey, one of the creatures that roam the woods living on leaves and roots, is beneath her anger.

She warns him that trying to leap the plastered golden wall will only make her his enemy, and orders him to go away. Her eyes smoke like a fire flaring up.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ākā ceytāy! añcalai pōlum? aṟivu illāy!
cākā mūlam tiṉṟu uḻalvārmēl calam eṉṉām?
pāku ār iñcip poṉmatil tāvip pakaiyātē!
pōkāy! 'eṉṟāḷ, poṅku aḻal eṉṉap pukai kaṇṇāḷ.