கம்பராமாயணம் 497 · பால 9.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காலன் மேனியின் - யமனது நிறம்போலக்; கருகு இருள் கடிந்து - கறுத்துள்ள இருட்டை நீக்கி; உலகு அளிப்பான் - உலகத்தைக் காக்கும் பொருட்டு; நிறை கதிர்க் கடவுள் - நிறைந்த கதிர்களையுடைய கதிரவன்; தேரொடு - தனது இரதத்தோடு; நீலம் ஆர்கலி - நீலக்கடலிலே; மாலின் மாமணி அயனொடு வந்த - திருமாலின் கரிய அழகிய உந்தியிலே பிரமனோடு தோன்றிய; மூலத் தாமரை முழுமலர் முளைத்தென - முதன்மையான பெரிய தாமரை மலர் முளைத்தது போல; முளைத்தான் - உதித்தான்.
தற்குறிப்பேற்ற அணி. கடலுக்குத் திருமால்; அக் கடலில் கதிரவன் தோன்றுகிற உதயமலைக்குத் திருமாலின் உந்தி; கதிரவனுக்கும் பிரமன்; தேருக்குத் தாமரை மலர் ஆகியவை உவமைகள் ஆயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Driving off the darkness, black as the body of Kālaṉ, to guard the world,
- with his chariot, out of the blue roaring sea, the god of full rays,
- like the full bloom of the primal lotus that came up, bearing Ayaṉ,
- from the great dark jewel of Māl's navel — so he rose.
What the poem says
Back in the main story, the night ends and the sun rises out of the dark-blue sea. Kampaṉ compares it to the start of creation. The dark sea is Tirumāl, the place where the sun rises is his navel, the sun is Brahmā (Ayaṉ), and the sun's chariot is the great lotus that grew from Tirumāl's navel with Brahmā seated in it. The darkness the sun drives away is black like the body of Kālaṉ, Death.