கம்பராமாயணம் 498 · பால 9.32

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அங்குநின்று எழுந்து அயன் முதல் மூவரும் அனையார்
செம் கண் ஏற்றவன் செறி சடைப் பழுவத்தின் நிறை தேன்
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால் பொன்னியைப் பொருவும்
கங்கை என்னும் அக் கரை பொரு திரு நதி கண்டார்.

பொருள் · Meaning in Tamil

அயன்முதல் மூவரும் அனையார் - (கதிரவன் உதயமானவுடன் பிரமன் முதலாகிய மும்மூர்த்திகளையும் ஒத்தவராகிய விசுவாமித்திரன் முதலான மூவரும்; அங்கு நின்று எழுந்து - அச்சோலையிலிருந்து புறப்பட்டு; செங்கண் ஏற்றவன் - சிவந்த கண்களைக் கொண்ட காளையை ஊர்தியாகவும் கொடியாகவும் உடைய சிவனது; செறிசடைப் பழுவத்தில் - அடர்ந்த சடையாகிய காட்டிலுள்ள; நிறை தேன் பொங்கு - நிறைந்த தேனொடு விளங்குகின்ற; கொன்றை ஈர்த்து ஒழுகலால் - பொன்னிறமுள்ள கொன்றை மலரை இழுத்துக் கொண்டு பெருகுவதாலே; பொன்னியைப் பொருவும் - (பொன்னி என்னும் பெயரொடு பொன்னைக் கொழிந்து வரும்) காவிரி நதியை ஒத்துள்ள; கங்கை என்னும் - கங்கை என்கிற; அக்கரை பொரு - அந்த இரு கரைகளிலும் மோதுகின்ற; திருநதி கண்டார் - அழகும் மேன்மையும் மிக்க ஆற்றைக் கண்டனர்.

காவிரி - கங்கை: திருமாலின் பரம பதத்திற்கு அருகிலுள்ள விரசை நதிபோல விளங்குவது காவிரி. இது நிலவுலகில் திருவரங்கத்தின் இரு பக்கங்களிலும் மாலைபோலச் சூழ்ந்துள்ளது. இத்தகைய சிறப்புடைய காவிரி கங்கைக்கு உவமையாயிற்று. அயன் முதல் மூவர்: பிரம்ம ரிஷிப் பட்டத்தை அரிய முயற்சியால் பெற்ற விசுவாமித்திரனுக்குப் பிரமனும், திருமாலின் அவதாரச்சிறப்புடைய இராமனுக்கு விஷ்ணுவும், மிக்க கோபமுள்ள இலக்குவனுக்கு அழிக்குங் கடவுளான உருத்திரனும் உவமையாயினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Rising from there, the three, who were like the three gods headed by Ayaṉ,
  2. saw the holy river called Gaṅgai, which, because from the dense forest of matted hair of him who rides the red-eyed bull
  3. it flows sweeping along koṉṟai blossoms brimming with honey, rivals the Poṉṉi,
  4. and beats against both its banks.

What the poem says

At sunrise Vicuvāmittiraṉ, Irāmaṉ and Ilakkuvaṉ leave the grove where they spent the night and reach the Gaṅgai. The three travellers are likened to the three great gods. Vicuvāmittiraṉ, who won the rank of brahmarṣi by hard effort, is like Brahmā. Irāmaṉ, an incarnation of Viṣṇu, is like Viṣṇu. The hot-tempered Ilakkuvaṉ is like Rudra the destroyer.

The Gaṅgai pours down from Śiva's matted locks and carries his golden koṉṟai flowers with it, so it looks like the Kāviri, the Poṉṉi or "golden river" of the Tamil country. A Tamil poet takes his home river as the measure, and the commentary adds that the Kāviri, which garlands Srirangam, is like the river Virajā at Viṣṇu's heavenly abode.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṅku niṉṟu eḻuntu ayaṉ mutal mūvarum aṉaiyār
ceṅ kaṇ ēṟṟavaṉ ceṟi caṭaip paḻuvattil niṟai tēṉ
poṅku koṉṟai īrttu oḻukalāl poṉṉiyaip poruvum
kaṅkai eṉṉum ak karai poru tiru nati kaṇṭār.