கம்பராமாயணம் 4971 · சுந்தர 3.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சூலம் - அனுமன் மேல் ஏவிய சூலப்படை; இற்று - முறிந்து; (அதனால்) நீறு எழல் காணா - புழுதி கிளம்புவதைப் பார்த்து; எரி ஒப்பாள்- நெருப்பைப் போன்று சீறி; மற்றும் - பிறகும்; பல்தெய்வப் படைகொண்டு - பலவிதமான தெய்வீகப்படைகளைக் கொண்டு; மலைவாளை உற்று - போர் செய்யும் இலங்கைத் தேவியை அணுக; பழிஇல்லான் - பழியற்றவனாகிய அனுமன்; கையால் - தன்னுடைய கைகளால்; ஆயுதம் எல்லாம் - எல்லா ஆயுதங்களையும்; ஒழியாமல் - தப்பாமல்; பற்றிக் கொள்ளா - கவர்ந்துகொண்டு (அவள் மேல் வீசாமல்); விண்ணில் எறிந்தான் - ஆகாயத்தில் வீசி எறிந்தான். சூலம் பொடியாகி அதனால் புழுதி எழுவதைக் கண்டு நெருப்புப் போற் சினங் கொண்டு இலங்கைத் தேவி வேறு படைகளைக் கொண்டு போரிட அனுமன் அவள்போர்க்கு வராதபடி ஆயுதங்களைப் பறித்து விண்ணில் எறிந்தான்.
நீறு - சூலம் முறித்த அதிர்ச்சியால் உண்டான புழுதி. சூலம் இற்றதே அன்றிப் பொடியாகவில்லை.
பழி ஓர்வான் என்று பாடம் கொண்டு பெண்ணைக் கொல்வதால் உண்டாம் பழியை நினைத்துப் படைக்கலங்களை விண்ணில் எறித்து அவளைக் கொல்லாது விட்டான் எனல் சிறப்புடைத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing the trident snap and the dust fly up, she, like fire,
- fought on with many other divine weapons; coming close to her,
- he seized in his hands every weapon, missing none,
- and flung them away into the sky — he who is without blame.
What the poem says
Seeing her trident broken, the goddess flares up like fire and attacks with a range of other divine weapons. Aṉumaṉ closes in and snatches every one of them from her hands.
He throws them away into the sky rather than turning them on her. The commentary prefers a variant reading which makes it explicit that he was thinking of the sin of killing a woman.