கம்பராமாயணம் 4972 · சுந்தர 3.90
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தகவு இல்லாள் - நற்பண்பு அற்ற இலங்கைத் தேவி; வழங்கும் - பகைவர் மேல் எறியும்; பல்தெய்வப் படை - பலவிதமான தெய்வீகப் படைகள்; காணாள் - சிதறிய இடங்களை அறியாமல்; வான்மலைமேல் - வானம் அளாவிய மலையின்மேல்; முழங்கும் - இடிக்கின்ற; மேகம் என்ன - மேகத்தை ஒப்ப; முரற்றி - கர்ச்சித்து; முனிகின்றாள் - சீற்றங்கொண்டு; குன்று - மலைகளை; கழங்கும் பந்து கொடு - கழற்சிக் காய்களாகவும் பந்துகளாகவும் பாவித்துக் கொண்டு; ஆடும் - விளையாடுகின்ற; கரம் ஓச்சி - கைகளை உயரத் தூக்கி; தழங்கும் செந்தீ- முழங்குகின்ற தீயானது; சிந்த - சிதறும்படி; (அனுமனை) அடித்தாள் - தாக்கினாள்.
அமைதியான மலையில் மேகம் இடிப்பதுபோல் அனுமனை இலங்கைத் தேவி அடித்தாள். மலை, வான் - வான் மலை எனக் கூட்டுக. வானத்தில் முழங்கும் மேகம் என்று சிலர் உரை கூறின் ஆய்க. மழைவான்மேல் என்று பாடம் கொண்டவரும் உளர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not seeing where her divine weapons had gone, like a cloud thundering
- over a lofty mountain she bellowed in fury, and,
- raising the hands that toy with hills as with jacks and balls,
- she struck him, scattering roaring red fire — she who knew no decency.
What the poem says
Her weapons gone, the goddess roars like a thundercloud breaking over a high mountain.
She raises her arms, so strong that she plays with hills as if they were children's jacks and balls, and strikes Aṉumaṉ with blows that throw off sparks of fire.