கம்பராமாயணம் 4973 · சுந்தர 3.91

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அடியா முன்னம், அங்கை அனைத்தும் ஒரு கையால்
பிடியா, 'என்னே? பெண் இவள்! கொல்லில் பிழை! 'என்னா
ஒடியா நெஞ்சத்து ஓரடி கொண்டான்; உயிரோடும்,
இடியேறு உண்ட மால்வரை போல், மண்ணிடை வீழ்ந்தாள்.

பொருள் · Meaning in Tamil

அடியாமுன்னம்- அவள் அடிப்பதற்கு முன்னே; அம்கை அனைத்தும் - அவளுடைய எட்டுக்கைகளையும்; ஒரு கையால் பிடியா - ஒரு கையாற் பற்றிக் கொண்டு; இவள் - இந்தப் பகைத்தி; பெண் - பெண்ணாக உள்ளாள் (ஆதலால்); என்- யான் எப்படிப் போரிடுவேன்; கொல்லின் - கொன்றால், பிழை - பாபமாகும்; என்னா - என்று கருதி; ஒடியா- மனம் இரங்கி; நெஞ்சத்து - அவள் மார்பில் (மற்றொரு கையால்); இடியேறு உண்ட - பெருத்த இடியால் தாக்கப்பெற்ற; மால்வரைபோல் - பெருமலைபோல்; உயிரோடும் - உயிருடன்; மண் இடை வீழ்ந்தாள் - பூமியிலே சாய்ந்தாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before she could strike, he seized all her hands in one hand;
  2. 'What is this? She is a woman! To kill her would be a sin!' he thought,
  3. and, relenting, dealt her a single blow upon her breast; with life still in her,
  4. like a great mountain struck by a thunderbolt, she fell to the earth.

What the poem says

Before her blows can land, Aṉumaṉ grips all eight of her hands in one of his. He reminds himself that she is a woman and that killing her would be a sin.

Holding back, he strikes her just once on the chest with his other hand. She crashes to the ground like a mountain hit by a thunderbolt, but she is still alive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭiyā muṉṉam, aṅkai aṉaittum oru kaiyāl
piṭiyā, 'eṉṉē? peṇ ivaḷ! kolliṉ piḻai! 'eṉṉā
oṭiyā neñcattu ōraṭi koṇṭāṉ; uyirōṭum,
iṭiyēṟu uṇṭa mālvarai pōl, maṇṇiṭai vīḻntāḷ.