கம்பராமாயணம் 4974 · சுந்தர 3.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(இலங்கைத் தேவி)
விழுந்தாள் - பூமியிலே விழுந்தாள்; நொந்தாள் - (தன்னை நொந்து கொண்டாள்; வெம் - வெப்பமான; குருதிச் செம்புனல் வெள்ளத்து - இரத்தமாகிய செந்நீர் வெள்ளத்து; அழுந்தா நின்றாள் - முழுகினாள் (பிறகு); நான்முகனார்தம் - பிரம்ம தேவனுடைய; அருள் ஊன்றி - திருவருளைப் பற்றிக் கொண்டு; எழுந்தாள் - எழுந்து நின்றாள்; எல்லா உலகத்தும் - எல்லா உலகங்களிலும் உள்ள; யாரும் - உயர்திணைப் பொருள்களும்; யாவையும் - அஃறிணைப் பொருள்களும்; தொழும் - கைகூப்பிப் பணியும்; தாள்வீரன் - திருவடியையுடைய இராமபிரானின்; தூதுவன் முன் நின்று - தூதுவனுக்கு முன்னே நின்று; இவை சொன்னாள் - இந்த மொழியைக் கூறினாள்.
இலங்கைத் தேவி, பூமியிலே விழுந்தாள்; நொந்தாள்; பிரம்மதேவனின் திருவருளைப் பற்றிக்கொண்டு எழுந்தாள். இராமதூதனைப் பார்த்துப் பின்வருமாறு பேசினாள்.
யாவரும் உயர்திணை, முப்பாலையும், யாவை, அஃறிணை ஒருமை பன்மையையும் உணர்த்தும் - (தொல்-சொல்-2/0, 219)
ஆங்கிலம் · English translationAI
Translation
- She fell; she was hurt; in a flood of hot red blood
- she was sinking; then, leaning on the grace of the Four-faced One,
- she rose; before the envoy of the hero whose feet all beings and all things
- in every world worship, she stood and spoke these words.
What the poem says
The goddess falls, wounded and lying in her own blood. Upheld by the grace of Brahmā, the Four-faced One, she gets to her feet.
She then stands before Aṉumaṉ, envoy of Irāmaṉ, at whose feet every being and every thing in all the worlds bows, and begins to speak. In the following verses she tells her story.