கம்பராமாயணம் 4976 · சுந்தர 3.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
யான் - நான்; இந்த மூதூர் - இந்தப் பழமையான இலங்கையை; எத்தனை காலம் காப்பென் - எவ்வளவு காலம் பாதுகாப்பேன்; என்று - என்று; முத்தனை வினவினேற்கு - வினைகளைக் கடந்த பிரம்ம தேவனை வினாவிய என்னிடம்; (அந்த முத்தன்) முரண் வலி - பெரு வலி பெற்ற; குரங்கு ஒன்று - ஒரு குரங்கு; உன்னை - (இலங்கைக் காவலை மேற்கொண்ட) உன்னை; கைத்தலம் அதனால் தீண்டி- தன்னுடைய கைகளால் தொட்டு; காய்ந்த அன்று - சினம் கொண்ட காலத்தில்; என்னைக் காண்டி - என்னைப் பார்ப்பாய்; பின்னை - பிறகு; சித்திர நகரம் - அழகிய இலங்கை நகரம்; சிதைவது திண்ணம் என்றான் - அழிவது உறுதி என்று கூறினான்.
காளிதாசன் பிரம்மதேவனைப் பரம் பொருள் என்பான் (குமாரசம்பவம்) முத்தன் - பரமன். இராமனை முத்தனார் என்பார் (கும்ப 26)
ஆங்கிலம் · English translationAI
Translation
- '"How long am I to guard this ancient city?" —
- when I asked this of the Freed One, he said: "When a monkey of fierce strength
- touches you with its hand in anger, on that day you shall come to me!
- After that, the lovely city will surely fall."'
What the poem says
Ilaṅkaimātēvi explains that she once asked Brahmā, the Freed One, how long she must guard the city.
He told her that her service would end on the day a mighty monkey struck her in anger. Then she would return to him, and the beautiful city would certainly be destroyed. Aṉumaṉ's blow has fulfilled the prophecy.