கம்பராமாயணம் 4978 · சுந்தர 3.96

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வீரனும், விரும்பி நோக்கி, 'மெய்ம்மையே! விளையும் அஃது! 'என்று,
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி, ஆண்டு, அப்
பூரியர் இலங்கை மூதூர்ப் பொன்மதில் தாவிப் புக்கான்,
சீரிய பாலின் வேலைச் சிறுபிரை தெறித்தது அன்னான்!

பொருள் · Meaning in Tamil

வீரனும் - வீரனாகிய அனுமனும்; விரும்பி நோக்கி - (இலங்கைத் தேவியை) அன்புடன் பார்த்து; மெய்ம்மையே - நீ கூறியது சத்தியமே; விளைவும் அஃது - நிகழப் போவதும் அதுதான்; என்று - என்று கூறி; ஆண்டு - அவ்வமயத்தில்; அ - அது; ஆரியன் - ஏற்றமுடைய இராமபிரானின்; கமலபாதம் - தாமரை போன்ற பாதங்கள்; அகத்து உற - உள்ளத்தே காட்சிவழங்க; வணங்கி - தொழுது; பொன் மதில் - பொன்னால் அமைந்த மதிலை; தாவி - கடந்து; சீரிய பாலின் வேலை - சிறந்த பாற்கடலின் கண்ணே; சிறுபிரை தெறித்தது அன்னான் - மோர்த்துளி தெளித்தது போன்று; பூரியர்- அற்பர்கள் வாழ்கின்ற, இலங்கை மூதூர் - பழைய இலங்கைக்குள்; புக்கான் - புகுந்தான்.

அறம் வெல்லும் -என்பதை மெய்ம்மை என்றும், உள்ளியதெல்லாம் முற்றும் என்பதை விளைவும் அஃதே என்றும் உடன்பட்டு அனுமன் கூறினான்.

'என்று' என்னும் செய்து வாய்பாட்டெச்சத்தை 'என' என்னும் செய என்னும் எச்சமாக மாற்றுக. அன்னான் என்னும் குறிப்பு வினைமுற்று ஒப்ப என்னும் பெயரெச்சப் பொருளில் வந்தது.

அனுமன் இலங்கையில் பல பகுதியில் தேடுதல், மோர் பாற்கடலில் கலப்பதை ஒத்திருந்தது (புறம் 179)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The hero too looked on her with kindness and said, 'It is the truth! And so it will turn out!',
  2. and bowing, as the lotus feet of the Noble One rose in his heart, there
  3. he leapt the golden wall of the ancient city of Ilaṅkai of the base ones and entered,
  4. like a little drop of curd-starter splashed into the excellent sea of milk!

What the poem says

Aṉumaṉ looks kindly at the goddess and agrees with both her statements: Dharma will win, and his purpose will be achieved.

Bowing in his mind to Irāmaṉ's lotus feet, he leaps the golden wall and enters the city of the wicked. He is like a drop of buttermilk falling into a sea of milk. It is a tiny thing, but it will curdle and transform the whole.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīraṉum, virumpi nōkki, 'meymmaiyē! viḷaivum aḵtu! 'eṉṟu,
āriyaṉ kamala pātam akattu uṟa vaṇaṅki, āṇṭu, ap
pūriyar ilaṅkai mūtūrp poṉmatil tāvip pukkāṉ,
cīriya pāliṉ vēlaic ciṟupirai teṟittatu aṉṉāṉ!