கம்பராமாயணம் 4979 · சுந்தர 3.97

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வான்தொடர் மணியில் செய்த மை அறு மாட கோடி
ஆன்ற பேர் இருளைச் சீத்துப் பகல் செய்த அமைவு நோக்கி,
'ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளைத் தேரோன்
தோன்றினன் கொல்லோ? 'என்னா, அறிவனும் துணுக்கம் கொண்டான்.

பொருள் · Meaning in Tamil

மைஅறு மணியில் செய்த - குற்றம் அற்ற மணிகளால் அமைக்கப் பெற்ற; வான்தொடர் - ஆகாயம் அளாவிய; மாடகோடி - மாளிகையின் சிகரம்; ஆன்ற - எங்கும் நிரம்பியிருக்கின்ற; பேர் இருளை - மிக்க இருளை; சீத்து - போக்கி; பகல் செய்த - ஒளியைத் தோற்றுவித்த; அழகை நோக்கி - தன்மையைப் பார்த்து; அறிவனும் - அறிஞனாகிய அனுமனும்; வான் - வானத்தில் இயங்கும்; ஒற்றை உருளைத் தேரோன் - ஒரு சக்கரத்தால் இயங்கும் தேரையுடைய சூரியன்; ஊன்றிய - நிலைத்த; உதயத்து உச்சி - உதயகிரியின் சிகரத்திலே; தோன்றினன் கொல் - உதித்து விட்டானோ; என்று - என்று நினைத்து; துணுக்கம் கொண்டான் - திடுக்கிட்டான்.

மாடம் -உதயகிரி. மாடகோடி - சூரியன். பகல் - ஒளி - பகற்காலம். பகல் கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி (பழம்பாட்டு) மாடம் - மாளிகை. கோடி - உச்சி (சிகரம்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing how the countless spotless mansions of gems that touch the sky
  2. swept away the vast, deep darkness and made it day,
  3. 'Has he of the single-wheeled chariot of the sky appeared
  4. on the summit of the firm rising-mountain?' — even the wise one was startled.

What the poem says

Inside the city Aṉumaṉ finds the night turned to day. The towering jewelled mansions shine so brightly that all the darkness is gone.

For a moment even the wise Aṉumaṉ is startled, wondering if the Sun, who rides a one-wheeled chariot, has already risen over the eastern mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉtoṭar maṇiyiṉ ceyta mai aṟu māṭa kōṭi
āṉṟa pēr iruḷaic cīttup pakal ceyta aḻakai nōkki,
'ūṉṟiya utayattu ucci oṟṟai vāṉ uruḷait tērōṉ
tōṉṟiṉaṉ kollō? 'eṉṉā, aṟivaṉum tuṇukkam koṇṭāṉ.