கம்பராமாயணம் 4987 · சுந்தர 3.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இலக்கண மரபிற்கு ஏற்ற - நூல் முறைக்குப் பொருந்திய; எழுவகை நரம்பின் - ஏழுவகையான நரம்பைப் பெற்ற; நல்யாழ் - சிறந்த யாழில்; அலத்தகம் - செம்பஞ்சு பூசப்பெற்ற; தளிர்க்கை நோவ - தளிர்போன்ற கைகள் வருந்த; கன்னியர் - அரக்கப் பெண்கள்; அளந்து - தாளத்திற்கேற்ப அளக்கப்பட்டு; எடுத்து அமைத்த பாடல் - எடுப்பாக அமைத்த பாசுரம்; கலக்குற - கலக்கம் அமையும்படி; முழங்கிற்று என்று - இடிக்கின்ற தென்று; மழையின்வாய்- மேகத்தின் வாயை; மலர்க்கையால் - (தம்முடைய) மலர்போன்ற கைகளால்; பொத்துவார் - மூடுகின்ற; சேடிமாரை - (அரக்கியரின் தோழியர்களையும்.
யாழில் உருக்கள் சுரங்களுடன் பாடப்பெறும் சுரங்களுடன் பாடும்பா பாசுரம் என்க. அளந்து எடுத்து அமைந்த பாடல் - இசைநூல் வல்லார் ஆராய வேண்டிய பகுதி. இயற்றமிழ் ஒன்றே அறிந்தவர் உண்மை காண ஒண்ணாதது அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு. அலத்தகப் பஞ்சு அடுத்த பரிபுரப் பல்லவம் (கம்ப. 2385) என்னும் தொடரை நோக்குங்கால் அலத்தகம் குழம்பை உணர்த்திடுமோ என்று தோன்றுகிறது. இது அரத்தகம் என்றும் வழங்கப்படும். பொத்துவார் - முற்று பெயரெச்சப் பொருளில் வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the fine harp of seven strings, true to the rules of the art,
- plucked till their tender lac-red hands ached, the song they had measured and raised —
- 'It thunders and disturbs it!' — so the maids of those young women
- with flower-hands stopped the mouths of the clouds above the mansions.
What the poem says
Young demon women play a carefully composed song on seven-stringed harps until their delicate hennaed fingers hurt.
When thunder rumbles and threatens to spoil the music, their maids reach up from the tall mansions and cover the clouds' mouths with their hands. The mansions are so high that the clouds are within reach.