கம்பராமாயணம் 4988 · சுந்தர 3.106
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சந்தம் - அழகிய; பூம்பந்தர் - பூவால் அமைந்த பந்தல்; வேய்ந்த - மேற்கட்டியாக அமைந்ததும்; சிந்தித்தது உதவும் - நினைத்தவற்றை வழங்கும்; தெய்வ - தெய்வத்தன்மை பெற்ற; மணிவிளக்கு ஒளிரும் - மணிகள் ஒளி வீசுவதும் (ஆன); தமனிய அரங்கில் - பொன்னாலான அரங்கத்தில்; வந்து - இசை மரபை நன்றாக அறிந்து; திருதம் ஒத்தும் மாக்கள் - தாளத்தை ஒத்துகின்றவர்களின்; விளம்பித நெறி - விளம்பித வழிகள்; வழாமை - தவறுபடாமல்; கந்தர்ப்ப மகளிர் - காந்தருவப் பெண்கள்; ஆடும் - ஆடுகின்ற; நாடகம் - நாடகத்தை; தம்தம் - தங்கள் தங்கட்குரிய; சேக்கை - ஆசனத்தில் இருந்து கொண்டு; காண்கின்றாரை - காண்பவராகிய அரக்க மகளிரை.
விளக்கு, அரங்கிற்கு இன்றியமையாதது. அதை அறிந்தால் அதைக் காணும் அவைக்குச் சேர்த்து மயங்கார்- இவ் விளக்கை மாண் விளக்கு என்பர் அடிகள் (சிலம்பு 3- 108) சேக்கை என்பதற்கு 'நாயகப்பந்தி' என்று பொருள் கொள்ளின். சேக்கை - ஆடும் நாயகப் பத்தி. திருதம் - தாளவகை. 'விளம்பிதம்' என்பது தாள ஒத்துக்கேற்ற கட்டுகளாகும். இசை நூற்கூறு - 'விளம்பின' என்ற பாடம் பொருட்சிறப்பின்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In a golden hall roofed with a lovely canopy of flowers, where each
- on her own couch, lit by divine jewel-lamps that grant whatever is thought of,
- as the masters skilled in the art beat quick time, the slow measures never faltering,
- watches the drama danced by the Gandharva women — these he saw.
What the poem says
Demon women sit on their couches in a golden theatre under a canopy of flowers, lit by magical jewel-lamps that grant every wish.
They watch a dance-drama performed by Gandharva women, celestial dancers, while expert musicians keep both the fast and the slow rhythms without a slip. The commentary adds technical notes on these musical terms.