கம்பராமாயணம் 4989 · சுந்தர 3.107
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திருத்திய - நன்றாக அமைக்கப் பெற்ற; பளிக்கு வேதி - பளிங்குத் திண்ணை; தெள்ளிய வேல்கள் என்ன - கூர்மையான வேல்களைப் போல வருத்த அதை மறக்க; கருத்து இயல்பு - மனத்தின் இயற்கையை; உரைக்கும் - வெளிப்படுத்துகின்ற; உண் - மை பூசப் பெற்ற; கண் கருங்கயல் - கண்ணாகிய கயல் மீன்கள்; செம்மை காட்ட - ஊடற் சீற்றத்தால் ஆகிய, செந்நிறத்தை வெளிப்படுத்தும்படியாக; வருத்திய - (பரத்தையின் தொடர்பால் துன்புறுத்திய; கொழுநர் தம்பால் - கணவர் மாட்டு; வரம்பு இன்றி - எல்லையில்லாமல்; வளர்ந்த காமம் - பெருகிய காமமாகிய; பயிர்க்கு நீர் போல் - பயிரில் பாய்ச்சப்படும் தண்ணீரைப் போலவும்; அருத்திய - (தாம்) விருப்பம் கொண்ட, அருநறவு - சிறந்த மதுவை; அருந்துவாரை - உண்பவராகிய அரக்க மகளிரையும்.
கருங்கயல் -பிரிவைக் காட்டுகிறது. வருத்துதல் - பரத்தையர்பால் பிரிந்து வருத்துதல். அடிகள், கண்ணகி கருங்கயல், மாதவி செங்கண் என்றார் (இந்திர - 237) கருங்கண் என்றது கண்ணகிக்குப் புணர்ச்சியின்மையால் செங்கண் என்று உரைத்தது மாதவிக்குப் புணர்ச்சி விதும்பலால் என்று அரும்பதவுரை பேசும். கயற்கண் அன்புப் பார்வையைக் காட்டும். வேல்வழி சீற்றத்தைக் காட்டும். (கம்.ப.983) இது விப்பிரலம்பம் (பிரிவு
ஆங்கிலம் · English translationAI
Translation
- On polished crystal daises — their kohl-dark eyes, keen as spears,
- dark carp that tell the heart's nature, turning red —
- as if watering the crop of desire grown boundless for husbands who had wronged them,
- those who drank the rare toddy they craved.
What the poem says
Aṉumaṉ sees women whose husbands have hurt them by going to other women. They sit on crystal platforms drinking wine.
Their eyes, normally dark and shaped like carp, are red with angry, frustrated longing and sharp as spears. The wine they drink is like water poured on a crop, feeding a desire that has grown beyond all bounds. The commentary identifies this as love in separation.