கம்பராமாயணம் 4991 · சுந்தர 3.109

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வில் படர் பவளப் பாதத்து அலத்தகம் எழுதி, மேனி
பொற்பு அளவு இல்லா வாசப் புனை நறும் கலவை பூசி,
அற்புத வடிக்கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி, அம் பொன்
கற்பகம் கொடுக்க, வாங்கிக், கலன் தெரிந்து அணிகின்றாரை.

பொருள் · Meaning in Tamil

படர்வில் - பரவிய ஒளியைப் பெற்ற; பவளப் பாதத்து - பவளம் போன்ற பாதங்களில், அலத்தகம் எழுதி - செம்பஞ்சுக் குழம்பை அலங்கரித்துப் பூசி; அளவு இல்லா - அளவு கடந்த; பொற்பு - பொலிவைப் பெற்ற; வாசம் - மணமுடைய; புனை - கற்பூரம் முதலானவை சேர்க்கப்பெற்ற; நறுங்கலவை - நல்ல கலவைச் சந்தனத்தை; மேனி பூசி - மேனியில் அணிந்து (பிறகு); அற்புத - அதிசயமான; வடி - கூர்மையான; கண் வாளிக்கு - கண்களாகிய அம்புக்கு; அஞ்சனம் எழுதி - மையிட்டு; அம் பொன் - அழகிய பொன்மயமான; கற்பகம் - கற்பக மரம்; கலன்கொடுக்க - ஆபரணங்களை வழங்க (அவற்றுள்); தெரிந்து - தமக்கு ஏற்றவற்றை அறிந்து; வாங்கி - பெற்று; அணிகின்றாரை - அணிபவர்களாகிய அரக்கப் பெண்டிரையும்.

வாங்கி என்றான் மரத்திற்குக் கீழே தம் கையைத் தாழ்த்தாமல் எடுத்துக் கொண்டமை நோக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Painting red lac on coral feet that spread a glow,
  2. smearing their bodies with fragrant paste of boundless loveliness,
  3. lining with collyrium the wondrous sharp arrows of their eyes, and then,
  4. as the kalpaka tree held out ornaments, choosing and taking and putting them on — these he saw.

What the poem says

Demon women adorn themselves. They paint their feet with red lac, rub perfumed sandal paste on their bodies, and line their arrow-sharp eyes with kohl.

Then the wish-granting kalpaka tree offers them jewels, and they simply choose what suits them and put it on. The commentary notes that they did not even have to stoop to pick it up.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṟpaṭar pavaḷap pātattu alattakam eḻuti, mēṉi
poṟpu aḷavu illā vācap puṉai naṟuṅ kalavai pūci,
aṟputa vaṭikkaṇ vāḷikku añcaṉam eḻuti, antil
kaṟpakam koṭuppa, vāṅkik, kalaṉ terintu aṇikiṉṟārai.