கம்பராமாயணம் 4993 · சுந்தர 3.111

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உள்ளுடை மயக்கால் உண்கண் சிவந்து, வாய் வெண்மை ஊறித்
துள்ளிடைப் புருவம் கோணித் துடிப்ப, வேர் பொடிப்பத் தூங்கும்
வெள்ளிடை மருங்குலார், தம் மதிமுகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற, நோக்கிக் கணவரைக் கனல்கின்றாரை.

பொருள் · Meaning in Tamil

தூய - (மேகம் முதலானவை இல்லாத) சுத்தமான; வெள்ளிடை - வெட்ட வெளி போன்ற; மருங்குலார் - இடையை உடைய மகளிர்; தம் மதிமுகம் - தம்முடைய சந்திரனை ஒத்த முகம்; வேறு ஒன்றாகி - பிறிதொருவடிவமாகி; கள்ளிடை தோன்ற - கள்ளின் சாடியிலே தெரிய; நோக்கி - அதைப் பார்த்து (அதனால்), உள் உடை மயக்கால் - மனம் சிதைந்ததால் உண்டாம் மயக்கத்தால்; உண்கண் சிவந்து - மையுண்ட கண்கள் சிவக்கப்பெற்று; வாய்வெண்மை ஊறி - வாயில் வெண்ணிறம் பரவி; துள் - துள்ளுகின்ற; புருவம் - புருவம்; இடை - நடுவில், கோட்டி துடிப்ப - வளைந்து துடிக்க; வேர் பொடிப்ப - வியர்வை அரும்பித் தோன்ற; கணவரை - (தன்னைத் தேடும் கணவரை; கனல்கின்றாரை - சீறுகின்ற மகளிரையும். இப் பாடலைப் பின்பற்றி பரஞ்சோதியார் அமைத்த பாடல் - திருவிளையாடற் புராணம் தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில் (75) காண்க. புலவர் புராணம், பரஞ்சோதி... கம்பன் தனை நம்பிக் கள்ளுண்டாட்டுரைத்தது என்று கூறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their kohl-dark eyes reddening with the turmoil within, whiteness spreading on their lips,
  2. their brows arched and quivering in the middle, sweat breaking out, the women
  3. with waists slight as the clear empty sky, seeing their moon-faces turn into something else
  4. as they showed in the toddy, raged at their husbands.

What the poem says

A comic scene. Tipsy women catch their own moon-like faces reflected in the wine bowl and, in their befuddled state, take the reflection for another woman.

Eyes reddening, lips paling, brows twitching and sweat breaking out, they turn furiously on their husbands as if caught with a rival. The commentary notes that a later poet, Parañcōti, imitated this verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḷḷuṭai mayakkāl uṇkaṇ civantu, vāy veṇmai ūṟit
tuḷḷiṭaip puruvam kōṭṭit tuṭippa, vēr poṭippat tūya
veḷḷiṭai maruṅkulār, tam matimukam vēṟu oṉṟu ākik
kaḷḷiṭait tōṉṟa, nōkkik kaṇavaraik kavalkiṉṟārai.