கம்பராமாயணம் 4994 · சுந்தர 3.112

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆலையில், மலையில், சாலி முளையினில், அமுத வாரிச்
சோலையில், துவசர் இல்லில், சோனகர் மனையில், தூய
வேலையில், கொள ஒணாத, வேல்கணார் குமுதச் செவ்வாய்
வாழ் எயிறு ஊறு தீம்தேன், மாந்தினர் மயங்குவாரை.

பொருள் · Meaning in Tamil

ஆலையில் மலரில்- கரும்பிலும் மலரிலும்; சாரல் முழையினில் - மலைச்சாரலையடுத்த குகையிலும்; அமுதவாரிச் சோலையில் - நீர்ப் பெருக்குடைய சோலையிலும், துவசர் இல்லில் - துவசர்களின் வீட்டிலும்; சோனகர் மனையில் - யவனர் மனையிலும்; தூய வேலையில் - தூய பாற்கடலிலும்; கொள ஒணாத - பெற முடியாத; வேல் கண்ணார் - வேல் போன்ற கண்ணைப் பெற்ற மகளிரின்; குமுதச் செவ்வாய் - குமுத மலர் போன்ற வாயில்; ஊறும் வால் எயிற்று - வெள்ளிய பற்களுக்கிடையில் ஊறுகின்ற; தீம் தேன் - இனிய தேனை; மாந்தினர் - நன்றாகக் குடித்து; மயங்குவோரை - மயங்குபவர்களாய அரக்கரையும்.

துவசர்-கள்விற்பவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From the sugar-press, from flowers, from caves on the slopes, from the nectar-streamed
  2. groves, from the toddy-sellers' houses, from the Yavanas' homes, from the pure
  3. sea, not to be had — from the lily-red mouths of spear-eyed women,
  4. the sweet honey welling between bright teeth, they drank, and were dazed.

What the poem says

Aṉumaṉ sees demon men drunk on their lovers' kisses. The poet lists every source of sweetness he can think of: the cane press, flowers, mountain hives, river groves, the taverns of toddy-sellers, the houses of the Yavanas (foreign traders known for wine), and even the Ocean of Milk.

None of these can supply the honey that flows from the red lips of these spear-eyed women.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ālaiyil, malaril, cāral muḻaiyiṉil, amuta vāric
cōlaiyil, tuvacar illil, cōṉakar maṉaiyil, tūya
vēlaiyil, koḷa oṇāta, vēṟkaṇār kumutac cevvāy
vāl eyiṟṟu ūṟu tīmtēṉ, māntiṉar mayaṅkuvārai.