கம்பராமாயணம் 4995 · சுந்தர 3.113

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நலனுறு கணவர் தம்மை நவை உறப் பிரிந்து, விம்மும்
முலை உறு கலவை தீய, முள் நிலா முளரிச் செங்கேழ்
மலர்மிசை மலர் பூத்து என்ன, வளைக் கையால் வதனம் தாங்கி,
அலமரும் உயிரினோடும், நெடிது உயிர்த்து அயர்கின்றாரை.

பொருள் · Meaning in Tamil

நலன்உறு - அழகுமிக்க; கணவர்தம்மை - கணவர் பால், நவைஉற - குற்றம் உண்டாக; பிரிந்து - ஊடலால் அவரைவிட்டு நீங்கி; விம்மும் - பருத்துள்ள; முலை - முலையின்கண்ணே; உறுகலவை - மிகுதியாகப் பூசப்பெற்ற சந்தனம்; தீய - தீய்ந்து போகும்படி; முள்இலா - முள்ளே இல்லாத; செங்கேழ் - சிவந்த ஒளிபெற்ற, முளரிமலர்மிசை - தாமரை மலரில்; மலர் பூத்த என்ன - மலரானது மலர்ந்தாற் போல; மலர்க்கையில் வதனம் தாங்கி - மலர் போன்ற கையால் முகத்தைத் தாங்கி; அலமரும் - ஊசலாடுகின்ற, உயிரினோடும் - உயிருடன்; நெடிது உயிர்த்து - பெருமூச்சு விட்டு; அயர்கின்றாரை - கவலைப்படுகின்ற மகளிர்களையும்,

துன்பம் உண்டாக்கப் பிரிந்தவர் துன்புறுதல் அதிசயம் - இவர்கள் கோபம் ஊடற்கோபமோ ? விரகக் கோபமோ ? உணர்வரிது. சேக்கிழார் புலவியோ, பிரிவோ என்பார் (ஏயர்கோன் 315) திருக்குறள் இந்நிலையை நிறையழிதல் என்னும் அதிகாரத்தில் பேசும். கணவர் தம்மை - கணவர்பால் - இரண்டன் உருபை ஏழன் உருபாக்குக. நவை - துன்பம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having parted, to their own grief, from their handsome husbands, the paste on their swelling
  2. breasts scorched away — like a flower blooming upon a thornless red
  3. lotus, cradling their faces in their flower-hands,
  4. with lives that wavered, they heaved long sighs and languished.

What the poem says

Women separated from their husbands after a quarrel are burning with the heat of longing, so hot that the sandal paste on their breasts dries up.

Each rests her face in her hand like a flower blooming on a flower, sighing deeply as if her life might leave her. The commentary remarks that it is hard to tell whether their pain comes from anger or from love-sickness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nalaṉ uṟu kaṇavar tammai navai uṟap pirintu, vimmum
mulai uṟu kalavai tīya, muḷ ilā muḷaric ceṅkēḻ
malarmicai malar pūtteṉṉa, malark kaiyāl vataṉam tāṅki,
alamarum uyiriṉōṭum, neṭitu uyirttu ayarkiṉṟārai.