கம்பராமாயணம் 4996 · சுந்தர 3.114

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏதி அம் கொழுநர் தம்பால் எய்திய காதலாலே,
தாது இயங்கு அமளிச் சேக்கை உயிர் இலா உடலில் சாய்வார்,
மாதுயர் காதல் தூண்ட, வழியின்மேல் வைத்த கண்ணார்,
தூதியர் முறுவல் நோக்கி, உயிர்வந்து துடிக்கின்றாரை.

பொருள் · Meaning in Tamil

ஏதி அம்கொழுநர் தம்பால் - ஆயுதம் ஏந்திய கணவர்பால்; எய்திய காதலால் - ஒன்றுபட்ட காமத்தாலே; (அவர்பிரிய) தாது இயங்கு - மகரந்தப்பொடிகள், அசைகின்ற; அமளிச்சேக்கை - படுக்கையிடத்தில்; உயிர் இலா - உயிர் அற்ற; உடலின் சாய்வார்- உடம்பைப் போல் விழுந்து; மாதுயர் - மிக்க துன்பத்தை உண்டு பண்ணும்; காதல் தூண்ட - காதலானது உந்துதலாலே; வழியின் மேல் வைத்த - (அவர் வரும்) வழியிலே நிறுத்திவைத்த; கண்ணார் - கண்களையுடையவராய், தூதியர் முறுவல் நோக்கி - தூதாகச் சென்ற பெண்களின் புன்னகையைப் பார்த்து; உயிர் வந்து - சென்ற உயிர் மீளவும் வரப் பெற்று; துடிக்கின்றாரை- துடிக்கின்றவர்களையும்,

ஏதி- ஆயுதம், அமளி - படுக்கை; சேக்கை - இடம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From the love they bore their husbands who carry weapons,
  2. they sink upon couches strewn with pollen like bodies without life;
  3. driven by a love that brings great pain, their eyes fixed upon the road,
  4. seeing the smiles of the go-between maids, their life returns and they tremble.

What the poem says

Women whose warrior husbands are away collapse on their flower-strewn beds as if dead, eyes fixed on the road by which their men will return.

When their messengers come back smiling with good news, life floods back into them and they tremble with excitement.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēti am koḻunar tampāl eytiya kātalālē,
tātu iyaṅku amaḷic cēkkai uyir ilā uṭaliṉ cāyvār,
mātuyar kātal tūṇṭa, vaḻiyiṉmēl vaitta kaṇṇār,
tūtiyar muṟuval nōkki, uyirvantu tuṭikkiṉṟārai.