கம்பராமாயணம் 4997 · சுந்தர 3.115
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சங்கொடுசிலம்பும் - சங்கு வளையல்களும் காற்சிலம்பும், நூலும் - அரை நூல் மாலையும் (மேகலை; பாத சாலகமும் - பாதத்தில் அணியும் கொலுசும்; தாழ - ஒலி குன்றும்படியாக; பொங்கு - மிக்கு ஒலிக்கின்ற; பல்முரசம் ஆர்ப்ப - பலவகை முரசங்கள் ஒலிக்கவும்; கொங்கு அலர் கூந்தல் - மணத்தைப் பரப்பும் கூந்தலையும்; செவ்வாய் - சிவந்த வாயையும் (உடைய); அரம்பையர் - தேவமாதர்கள்; பாணி கொட்டி - தாளத்தை ஒற்றி, மங்கல கீதம் பாட - மங்கலப் பாடல்களைப் பாடவும்; இல்லுறை தெய்வம் போற்றி - வீட்டுத் தேவதைகளைப் புகழ்ந்து; மலர்ப்பலி - அருச்சனைப் பூக்களை; வகுக்கின்றாரை - தூவுகின்ற இல்லுறை மகளிர்களையும்;
இல்லுறை தெய்வம்- வீட்டுத் தேவதை. இலக்கணையார் இலம்பகத்தில் இனியர் ஆம் பாடலில் இல்லுறை தெய்வத்திற்குப் பூப்பலியைச் சிந்தினார் என்று வரைந்தார். பூப்பலி செய்து (சிலம்பு - 28 - 231) பூப்பலி - அருச்சனை (குறிப்புறை நூல் - அரைநூல்மரவை (மேகலை)
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that conch bangles, anklets, girdles and foot-chains are drowned,
- as many swelling drums resound, praising the deities who dwell in the house,
- while heavenly women with fragrant flowering tresses and red lips beat time
- and sing auspicious songs — those who lay out offerings of flowers.
What the poem says
Some demon women perform household worship. They scatter flowers as offerings to the family gods while great drums boom loudly enough to drown the jingling of their own jewellery.
Celestial women serve them by keeping time and singing auspicious hymns.