கம்பராமாயணம் 4998 · சுந்தர 3.116

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இழைதொடர் வில்லும், வாளும், இருளொடு மலைய, யாணர்க்
குழைதொடர் நயனக் கூர்வேல் குமரர் நெஞ்சு உருவக் கோட்டி,
முழைதொடர் சங்கு, பேரி, முகில் என முழங்க, மூரி
மழைதொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை.

பொருள் · Meaning in Tamil

இழை தொடர்- ஆபரணங்களிலிருந்து புறப்படும்; வில்லும் - (விட்டுவிட்டு வரும்) ஒளியும்; வாளும் - இடையீடின்றி வரும் ஒளியும்; இருளொடு மலைய - இருளுடன் போர் செய்யவும்; குழை தொடர் - காதணிகளை அளாவும்; நயனம் - கண்களாகிய; யாணர் - புதுமையான; கூர்வேல் - கூர்மையான வேலை; கோட்டி - செலுத்தி (அதனால்), குமரர் நெஞ்சு - இளைஞர்களின் நெஞ்சங்களை; உருவ - துளைக்கவும்; தொடர் - அடுக்கடுக்கான; முழைசங்கு - துளை பெற்ற சங்குகளும்; பேரி - முரசங்களும்; முகில் என - மேகம் போல; முழங்க - ஆரவாரிக்கவும்; மூரி மழை தொடர் - வலிய மேகத்தின் பால் அன்பு கொண்ட, மஞ்ஞை என்ன - மயில்களைப் போல; விழாவொடு வருகின்றாரை- விழாக் கோலத்துடன் வரும் பெண்டிரையும்; மலைய, உருவ, முழங்க, வருகின்றாரை எனக் கூட்டுக - அன்றி - மலைய, முழங்க, வேல் உருவக் கோட்டி வருகின்றாரை என்றும் பொருள் கொள்ளலாம். வில் - விட்டுவிட்டுப் பிரகாசிப்பது வாள் - தொடர்ந்து பிரகாசிப்பது. வில்லும் வாளும் இருளொடு போர் செய்கிறது (சிலேடை) பெண்மையைச் சிறப்பிக்கும் சங்க நூல்கள் 'விழவு மேம்பட்ட நலன்' (குறுந 125) குறுமகள் வந்தென விழவாயிற்று (குறுந் 294) என்று பேசும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The flashing and the steady gleam of their jewels battling with the darkness,
  2. aiming the fresh, keen spears of their eyes that reach to their earrings so they pierce young men's hearts,
  3. while ranks of hollow conches and drums thunder like clouds,
  4. like peacocks that follow the mighty rain-cloud, coming in festive procession.

What the poem says

Women come in a festive procession. The flickering and steady light of their jewels fights back the darkness, and their long eyes, reaching to their earrings, pierce young men's hearts like spears.

Conches and drums roar like thunderclouds, and the women dance along like peacocks greeting the monsoon rain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḻaitoṭar villum, vāḷum, iruḷoṭu malaiya, yāṇark
kuḻaitoṭar nayaṉam kūrvēl kumarar neñcu uruvak kōṭṭi,
muḻaitoṭar caṅku, pēri, mukil eṉa muḻaṅka, mūri
maḻaitoṭar maññai eṉṉa viḻāvoṭu varukiṉṟārai.