கம்பராமாயணம் 4999 · சுந்தர 3.117
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பள்ளியில் - படுக்கையில், மைந்தரோடும் - தம்முடைய கணவருடன்; ஊடிய பண்பு நீங்கி - பிணங்கிய இயல்பை விடுத்து; ஒள்ளிய - சிறந்த; கலவிப் பூசல் உடற்றுதற்கு - புணர்ச்சிப் போர்புரிவதற்கு; உருத்தநெஞ்சர் - சீறிய மனத்தையுடையவராய்; மெள்ள - மெதுவாக; இமையை நீக்கி - கண்ணிமைகளைத் திறந்து; அஞ்சனம் - மையாகிய; இழுது வேய்ந்த - நெய் பூசப் பெற்ற; கள்ளவாள் - வஞ்சகமும் கொடுமையும் பெற்ற; நெடுங்கண் என்னும் - பெரிய கண்கள் ஆகிய; வாள் - வாளாயுதத்தை; உறை கழிக்கின்றாரை - உறையிலிருந்து கழித்தெடுப்பவரையும்.
ஈங்கு பேசப்படும் மகளிர் ஊடலால் உறங்குவதுபோல் பாசாங்கு புரிபவர்கள். அவர்களின் உள்ளக் காதலே ஊடலை நீக்கிற்று. கணவன் காணாதபோது அவனைக் கண்டு அவன் நிலையை ஆராய்தலின் கள்ள நெடுங்கண் என்றார் கலிங்கத்துப் பரணி இத்துயிலைப் பொய்த்துயில் என்று பேசும். போர் என்றமையால் உருத்த நெஞ்சர் என்றார் மை நெய்யாகவும், இமை உறையாகவும் கொள்க. இழையை நீக்கி என்பது பாடமாயின் அணிகள் கலவிப் போர்க்கு இடையூறு நல்கிற்று என்று நீங்கியதாகக் கொள்க (கம்ப. 1017).
ஆங்கிலம் · English translationAI
Translation
- In their beds, giving up their sulking with their men,
- their hearts fierce to wage the bright battle of love,
- slowly drawing back their eyelids, those coated with the oil of collyrium
- drew from the sheath the swords that were their long, sly, cruel eyes.
What the poem says
Women who have been pretending to sleep in order to sulk give up their quarrel, eager now for the "battle" of love.
They slowly open their eyes, peeking slyly at their husbands, like warriors drawing swords from their scabbards. The eyelids are the sheath and the kohl is the oil on the blade. The commentary notes that another classic calls this kind of pretended sleep "false sleep".