கம்பராமாயணம் 5000 · சுந்தர 3.118

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓவியம் அனைய மாதர் ஊடினர், உணர்வோடு உள்ளம்
மேவிய கரணம் முற்றும் கொழுநரோடு ஒழிய, யாணர்த்
தூவி அம் பேடை என்ன, மின் இடை துவள ஏகி,
ஆவியும் தாமுமே புக்கு, அரும் கதவு அடைக்கின்றாரை.

பொருள் · Meaning in Tamil

உணர்வோடு உள்ளம் - உணர்ச்சியும் ஊக்கமும், மேவிய கரணம் - ஒன்றியிருக்கும் அந்தக் கரணங்களும்; மற்றும் - பிற பொருள்களும்; கொழுநரோடு ஒழிய - கணவர்பால் சென்று தங்க (தனித்திருந்து); ஊடினர் - ஊடல் கொண்டு; யாணர் - அழகிய; தூவியம் பேடை என்ன - இறகையுடைய பெண் அன்னம் போல; மின் இடை - மின்னல் போன்ற இடையானது; துவள ஏக - துவளும்படியாகப் புறம்பே போய்; ஆவியும் தாமுமேயாம் - பெருமூச்சும் தாமுமாக இருந்துகொண்டு; அருங்கதவு அடைக்கின்றார் - சிறந்த கதவை அடைக்கின்ற, ஓவியம் அனைய மாதர் - சித்திரம் போன்ற மாதரையும். கரணம்- மனம், புத்தி சித்தம், அகங்காரம். உணர்வு-அறிவு உள்ளம்- ஊக்கம். தலைவிக்கு உதவியாக இருந்தது பெருமூச்சே. உள்ளம் மேவிய கரணம் என்பதை ஒரு தொடராக்கி அந்தக் கரணம் என்று உரை கூறுவர், சிலர் உள்ளம் - மனம் என்பர் சிலர். ஆவி-உயிர் என்று கூறப்பெற்றது. ஆவி-பெருமூச்சு. 'உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே' (கம்ப. 1092.) ஐ உருபு மாதருடன் கூட்டப் பெற்றது - அடைக்கின்ற மாதரை என அமைக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Women like paintings, sulking, while their awareness, their will
  2. and all the faculties of mind, and all besides, stayed behind with their husbands,
  3. like lovely feathered hen-swans, their lightning-waists swaying, went out
  4. and, with only their sighs for company, entered and shut the strong doors.

What the poem says

Some women, beautiful as paintings, storm off from their husbands in a sulk. Their hearts and minds stay behind with the men, so they leave with nothing but themselves.

Swaying like swans, they go into a room alone with their sighs and shut the heavy door behind them. The commentary explains the "faculties of mind" and the double sense of the word for breath or life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōviyam aṉaiya mātar ūṭiṉar, uṇarvōṭu uḷḷam
mēviya karaṇam maṟṟum koḻunarōṭu oḻiya, yāṇart
tūviyam pēṭai eṉṉa, miṉ iṭai tuvaḷa ēka,
āviyum tāmumē pukku, aruṅ katavu aṭaikkiṉṟārai.