கம்பராமாயணம் 5001 · சுந்தர 3.119

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கிளர் - மேல்நோக்கி எழுகின்ற; மழை - மேகத்தை, கிழித்துத் தோன்றும் - பிளந்து கொண்டு வெளிப்படுகின்ற; மின் என - மின்னலைப் போல; தரளம் வேய்ந்த - முத்துக்களால் போர்த்தப் பெற்ற; வெண்நிற - வெண்மையான நிறத்தைப் பெற்ற; விமானம் ஊர்ந்து - விமானத்தைச் செலுத்தி; (தமக்குரிய இடத்தைச் சார்ந்து) (அங்கே) கின்னர மிதுனம் பாட - கின்னரப் பறவைகள் பாடவும்; பன்னக மகளிர் - நாகலோகப் பெண்கள்; சுற்றி - சூழ இருந்து கொண்டு; இசை - பண்ணுடன்; பலாண்டு பரவ - பல்லாண்டுகளால் வாழ்த்தவும்; பண்ணை - நீர்நிலைகளைப் பெற்ற; பொன்நகர் வீதிதோறும் - புதிய நகரத்தில் அமைந்த வீதிதோறும்; புதுமனை புகுகின்றாரை - புதிதாகக் கட்டப்பெற்ற வீடுகளில் புகுபவரையும்; “பொன்” என்ற சொல் புதுமையைக் காட்டும். பொன்ளர் - என்பது முதலில் உழுதலைக் குறிப்பதை அறிக. பண்ணை - நீர்நிலை. தக்கை இராமாயணம் இல்லறவீதியும் புதுமனையும் கட்டிக் குடியேறும் பலரைக் கண்டான் என்று பேசும் (செளந்தரிய - ஊர் தேடு - 8) நகரும் புதிது வீடும் புதிது. கின்னர மிதுனம் - இசைபாடும் பறவை. கின்னரம் முரலும் அணங்குடைச்சாரல் (பெரும்பாண் 494) பெரியாழ்வார் கின்னரம் மிதுனங்களும் கின்னரம் தொடுகிலோம் என்றனர் (பெரியாழ்வார் திருமொழி 3 - 6) என்று பாடுகிறார். மணவாள மாமுனிகள், கொண்டு பாடித்திரிகையாலே கிந்நரமிதுனங்கள் என்று ஜகத்பிரஸித்தங்களாய் இருக்கின்றவர்கள் என்று விளக்கம் தந்தார் ஆழ்வாரின் திருவுள்ளம். கின்னரமிதுனம் தேவர்கள் என்று கருதுகின்றது. கம்பர் பாடுகின்ற கின்னர மிதுனங்கள் என்பார் ஏற்பன கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While Kinnara pairs sang, like lightning tearing through the rising clouds,
  2. riding in white aerial cars roofed with pearls,
  3. the serpent-women around them singing blessings of long life, in the pool-filled
  4. golden city, along every street, those who were entering new homes.

What the poem says

Aṉumaṉ sees housewarmings taking place along the streets of the newly built golden city. The owners arrive in white aerial chariots covered with pearls, flashing like lightning through the clouds.

Pairs of Kinnaras, celestial singers, sing for them, and Nāga women gather round to wish them long life. The commentary discusses whether the Kinnaras are birds or demigods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kiṉṉara mituṉam pāṭak, kiḷarmaḻai kiḻittut tōṉṟum
miṉ eṉat, taraḷam vēynta veṇniṟa vimāṉam ūrntu,
paṉṉaka makaḷir cuṟṟip palāṇṭu icai paravap paṇṇaip
poṉṉakar vīti tōṟum, putumaṉai pukukiṉṟārai.