கம்பராமாயணம் 5003 · சுந்தர 3.121
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இயக்கியர் - யட்சப்பெண்கள்; அரக்கிமார்கள் - அரக்கப் பெண்கள்; நாகியர் - நாகலோகப் பெண்கள்; எஞ்சு இல் -குறைவற்ற; முயல்கறை- முயலாகிய களங்கம்; இல்லாத் திங்கள் - இல்லாத சந்திரனைப் போன்ற; முகத்தியர் - முகத்தையுடைய; விஞ்சை - வித்தியாதரப்பெண்கள்; முதலினோரை - முதலான பெண்களை; மயக்கு அற - சந்தேகம் இல்லாதபடி; நாடி ஏகும் மாருதி - ஆராய்ந்து செல்லும் ஆஞ்சநேயன்; மலையின் வைகும் - மலைபோல் உள்ளவனும்; கயக்கம் இல் துயிற்சி - இடையீடில்லாத உறக்கத்தை உடையவனும் ஆகிய; கும்பகருணனை - கும்பகர்ணனை; கண்ணின் கண்டான் - கண்களால் பார்த்தான்.
இயக்கியர் முதலானோரை நாடிச் செல்லும் மாருதி கும்பகர்ணனைப் பார்த்தான். முகத்தியர், என்னும் குறிப்பு வினைமுற்று பெயரெச்சப்பொருளில் வந்தது. வினை எஞ்சு கிளவியும் வேறு பல்குறிய (தொல்-சொல் 457-சேனற விஞ்சை என்பது ஆகுபெயராய் விஞ்சையரைக் குறித்தது. 'வித்தைகள் வித்தை ஈசர்' என்னும் சித்தியாரில் வித்தை என்பது மந்திரேசுரரைக் குறித்தமை காண்க (சித்தி. சுபக்கம் 1-25) கயக்கம் - இடையீடு. 104 முதல் 121 வரை ஒரு தொடர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Yakṣa women, demon women, Nāga women, the flawless women of the Vidyādharas
- with faces like moons without the hare's stain, and all the rest —
- Māruti, who went on searching them out without confusion, saw with his own eyes
- Kumpakaruṇaṉ, lying there like a mountain in unbroken sleep.
What the poem says
This verse completes the long sentence that began many verses earlier. Aṉumaṉ has carefully examined the women of every race, Yakṣa, demon, Nāga and Vidyādhara, with moon-like faces, looking for Cītai among them.
Now he comes upon Kumpakaruṇaṉ, Irāvaṇaṉ's giant brother, sunk in his endless sleep like a mountain. A new metre begins with the next verse.