கம்பராமாயணம் 5004 · சுந்தர 3.122

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது உம்பரின்
வாசவன் மணிமுடி கவித்த மண்டபம்
ஏசு உற விளங்குவது இருளை எண்வகை
ஆசையின் நிலைகெட அகற்றி ஆன்றது.

பொருள் · Meaning in Tamil

(கும்பன் அரண்மனை)

ஏழ் ஒசனை - ஏழு யோசனை தூரம்; அகன்று உயர்ந்தது - விரிவு பெற்று அதற்கேற்ப உயர்ந்தது; உம்பரின் - விண்ணுலகத்தில்; வாசவன் - இந்திரன்; மணி முடி கவித்த மண்டபம் - அழகிய முடியைத் தரித்துக் கொண்ட மண்டபமானது; ஏசுற - பழியடையும்படி; விளங்கியது - (அதனினும் சிறப்பாக) ஒளி வீசுவது; எண்வகை ஆசையின் - எட்டுத் திக்கின் கண்ணும் உள்ள; இருள் - இருளானது நிலைகெட - நிலைகெட்டு அழிய; அலைக்கல் ஆன்றது - ஓடச்செய்தலால் (மன) நிறைவு பெறுவது.

இந்திரன் மணிமுடிசூடும் மண்டபம் இந்திரனின் மணிமுடியைச் சூடிய மண்டபம் என்றும் இந்திரனின் மணி முடியைப் பறித்துக் கொண்டு வந்து கும்பகர்ணன் அதை அணிந்து கொண்ட மண்டபம் என்றும் கூறலாம். “மன்னும் புரந்தரன்தன் முடிபதித்த மணிமண்டபத்து” என்று எம்பெருமான் கவிராயர் பாடுகின்றார் (தக்கை ராமாயணம் செளந்தரிய - ஊர்தேடு. 9) கலிவிருத்தம். ஊர் தேடு படலத்தில் 43 ஆம் பாடலின் குறிப்பைக் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seven yojanas broad and as high, so that the hall in heaven
  2. where Vācavaṉ wears his jewelled crown
  3. was put to shame, it shone, great enough to drive the darkness
  4. of all eight quarters from its place and put it to rout.

What the poem says

The hall where Kumpakaruṇaṉ sleeps is seven yojanas wide and just as high. It outshines the hall in heaven where Vācavaṉ (Intiraṉ) wears his crown.

The commentary allows another reading: this is the hall where Intiraṉ's own crown, seized as plunder, is kept or worn. Its light drives away the darkness in every direction.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōcaṉai ēḻ akaṉṟu uyarntatu umpariṉ
vācavaṉ maṇimuṭi kavitta maṇṭapam
ēcuṟa viḷaṅkiyatu iruḷai eṇvakai
ācaiyiṉ nilaikeṭa alaikkal āṉṟatu.