கம்பராமாயணம் 5006 · சுந்தர 3.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அரண்மனையில்)
தாது உகு - மகரந்தப் பொடிகள் சிந்துகின்ற; மன்நெடுங் கற்பக வனத்து - நிலைபெற்ற பெரிய கற்பகச் சோலையில்; வைகிய - தங்கியிருந்த; இன் - இனிமையான; இளந்தென்றல் - இளமையான தென்றற் காற்றானது; முன்னிய - கிளர்ந்துள்ள; கனைகடல் முழுகி - ஆரவாரிக்கும் கடலில் நீராடி; தன் இயல் - தனக்குப் பொருத்தமான; மூவகைக் கதியொடும் தழுவி - மூன்றுவகையான நடையை மேற்கொண்டு; வந்து - கும்பகர்ணனின் பக்கம் வந்து; இழுகி ஏக- வருடிச் செல்லவும்.
முன்னிய -கிளர்ந்தெழுந்த. நளிகடல் முன்னியது போலவும் (பரிபாட்டு 12-7) பணி செய்வோர் நீராடித் தூய்மையுடன் வந்து தொண்டு புரிவர் அதனையே தென்றல் மேற்கொண்டது. மூவகை இயல, மந்த நடை, மத்திய நடை, துரித நடை (அடை பதி) குளிர்ச்சி, மந்தம், பரிமளம் ஆக கதி மூன்றினையும் என்பது பழைய உரை. (அடை - பதி) காளிதாசரும் இம் மூன்று பண்பையே போற்றுவார். கங்கை நீர் தோய்ந்ததால் குளிர்ச்சியும், தேவதாரு மரங்களின் சார்பால் மணமும், மயில்தோகையை அலைத்ததால் மென்மையும் பெற்ற காற்று வேடர்களின் நலிவைப் போக்கிற்று என்பர் (குமார 1-15)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having bathed in the surging, roaring sea, with its three
- proper paces upon it, from the pollen-shedding
- great, enduring kalpaka grove where it dwells,
- the sweet young southern breeze came, stroked him, and passed on;
What the poem says
Even the breeze serves Kumpakaruṇaṉ. The gentle southern wind, which lives in the kalpaka grove, first bathes in the sea like a servant purifying himself before duty. Then it comes and strokes the sleeping giant.
It moves with its three proper qualities. An older commentary lists them as coolness, gentleness and fragrance, the same three Kālidāsa praises in a breeze.