கம்பராமாயணம் 5007 · சுந்தர 3.125
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வானவர் மகளிர்- தேவமகளிர்; கால் வருட - கால்களைப் பிடித்து விடவும்; மாமதி - நிறைந்த பூரண சந்திரனானவன்; ஆனனம் கண்ட - தன் முகத்தைப் பார்த்துக் கொள்ளும்; மண்டபத்துள் - மண்டபத்தின்கண்; ஆய்கதிர் - மென்மையான ஒளி; நகு - விளக்கம் பெற்ற; காந்தக் கால் - காந்தத்தால் அமைத்த தூண்; மீ கான்ற - மேலே வெளிப்படுத்திய; காமர் - இனிமையானதும்; தூ- தூய்மையானதும்; நிறம் - சிறப்பு மிக்கதும் (ஆன; நறும் நீர்த்துளி - நறுமணம் மிக்க நீர்த்துளி; முகத்தில் - முகத்திலே; தூற்ற - மெல்ல வீசப் பெறவும்.
சந்திரன் தன்முக அழகைப் பார்க்கும் மண்டபம். சந்திரன் பார்வை பட்டதால் காந்தத் தூண்கள் நறுந்துளி தூற்றின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While heavenly women stroked his feet, in the hall where the great moon
- gazes on its own face, the moonstone pillars gleaming with soft rays
- poured forth from above lovely water,
- sprinkling pure, fragrant, fine drops upon his face;
What the poem says
Celestial women massage Kumpakaruṇaṉ's feet. The hall is so splendid that the full moon uses it to look at its own reflection.
Its pillars are made of moonstone, which in Indian lore oozes water when moonbeams fall on it, and they sprinkle cool, fragrant drops on the sleeper's face.