கம்பராமாயணம் 5008 · சுந்தர 3.126
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மூசிய - ஒன்றன் பின் ஒன்றாய் மொய்த்து வருகின்ற; உயிர்ப்பு எனும் - மூச்சுக்காற்று எனப்படும்; முடுகு வாதமும் - வேகமான காற்றும், வாசலின் புறத்திடை நிறுவி - (அனுமனைக் கும்பகர்ணன் கிடந்த அரண்மனை) வாயிலின் புறத்தை விட்டு அப்பாற் செல்ல வொட்டாது நிறுத்தி; வன்மையால் - தன் ஈர்ப்பு வலிமையினாலே; நாசியின் அளவையின் நடத்த - கும்பகர்ணனது மூக்கு வரை இழுப்பது ஆக இயக்க; கண்டவன் - அதனை அநுபவத்தால் உணர்ந்த அனுமன்; கூசினன் - மூக்கின் உள்ளே செல்லக்கூச; விதிர்த்த கையினான் குதித்தனன் - அச்சத்தால் கைகளை உதறிக் குதித்து அப்பாற் சென்றான்.
புறத்தே அனைத்தையும் கண்டுவரும் அனுமனைக் கும்பகர்ணனது சுவாசக் காற்று தன் வாசலை விட்டுப் புறஞ் செல்லாது நிறுத்தி மூக்குவரை இழுக்க உள்ளே போகாது தன் ஆற்றலால் தப்பிக் கை உதறிக் குதித்தான் எனவே அத்தகு சுவாச காதம் உடையனாய் உள்ளான் கும்பகருணன் என்பதாம். “வீரன் வாயில் திறத்தலும் சுவாத காதம் மண்டுற, வீரர் எல்லாம் வருவது போவதாக (கம்ப.7320) எனப் பின்வருவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rushing gale of his crowding breath
- held him outside the doorway, and with its force
- drew him along as far as the nostrils; he who felt this
- shrank back, and leapt away, shaking his hands.
What the poem says
Kumpakaruṇaṉ's breathing is a gale. As Aṉumaṉ stands at the door, the giant's in-breath catches him and drags him right up to the sleeper's nostrils.
Aṉumaṉ recoils from being sucked inside, shakes his hands in alarm and jumps clear with all his strength. The commentary notes a later scene in which Kumpakaruṇaṉ's breath sweeps warriors to and fro.