கம்பராமாயணம் 5010 · சுந்தர 3.128
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பகைஎன - பகை என்று கருதி; மதியினை - பூரண சந்திரனை; பகுத்து - இரண்டு கூறு படுத்தி; அகைஇல்- வருத்தம் இல்லாத; பேழ்வாய் - பெரியவாயின்; பாடு - இரண்டு பக்கத்திலும்; உற மடுத்து - நன்றாக உட்கொண்டு; அருந்துவான் என - உண்பவனைப் போல, புகையொடு - புகையும்; முழங்குபேர் உயிர்ப்பு - முழங்குகின்ற பெருமூச்சு; பொங்கி - மிக்கிருக்கின்ற; நகை இலா - புன்னகையில்லாத; முழுமுகத்து - பெரியமுகத்திலே; எயிறு நாற - பற்கள் தோன்றவும்.
சந்திரனை இரண்டு கூறுபடுத்தி உண்பவனைப் போல இரண்டு பக்கங்களிலும் வெண்மையான பற்கள் தோன்றவும். புகையும், உயிர்ப்பும் உள்ள முகம் நாற - வெளிப்பட்டுத்தெரிய அகையில் - வருத்தம் இல்லாத. உணவு இல்லாமையால் வருத்தமடையாத வாய். அகை - வருத்தம். அகையேல் அமர் கோழி (சிந்த 1524)
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if, taking the moon for a foe, he had split it in two and,
- stuffing both halves into the sides of his tireless gaping mouth, were eating it,
- as his great breath welled up, roaring with smoke,
- in his vast unsmiling face his teeth showed white.
What the poem says
In Kumpakaruṇaṉ's huge, grim face, from which smoky breath roars out, his two white fangs show at the corners of his mouth.
It looks as if he had broken the full moon in half, taking it for an enemy, and were chewing the halves on either side of his enormous jaws.