கம்பராமாயணம் 5011 · சுந்தர 3.129

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தடையுறு மந்திரம் தகைந்த நாகம்போல்
இடையுறவு அரியது ஓர் உறக்கம் எய்தினான்
கடையுக முடிவெனும் காலம் ஓர்ந்து அயல்
புடைபெயரா நெடும் கடலும் போலவே.

பொருள் · Meaning in Tamil

யுகம் முடிவு எனும்- யுகங்களின் முடிவு என்று கூறப்படும்; கடை காலம் ஓர்ந்து - பிரளய காலத்தை எதிர்பார்த்து; அயல் புடை பெயரா- கரையைவிட்டுச் செல்லாத; நெடும்- பெரிய; கடல் போல - சமுத்திரத்தைப் போலவும்; தடைபுகு மந்திரம் - தடையைச் செய்யும் மந்திரத்தால்; தகைந்த - கட்டுப்பட்ட; நாகம் போல் - நல்ல பாம்பைப் போலவும்; இடை - இடையூறு; புகல் அரியது - புகவியலாத; உறக்கம் எய்தினான் - உறக்கத்தை அடைந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a cobra held fast by a binding spell,
  2. he had sunk into a sleep that nothing could break into,
  3. like the vast ocean that, awaiting the time called the end of the final age,
  4. does not stir from its bounds.

What the poem says

Kumpakaruṇaṉ's sleep cannot be broken. He lies as still as a cobra held motionless by a snake-charmer's spell.

He is also like the vast ocean, which stays within its shores while it waits for the end of the age, when it will rise and flood the world. The image hints at the destruction he will cause once he wakes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṭaipuku mantiram takainta nākampōl
iṭaipukal ariyatu ōr uṟakkam eytiṉāṉ
kaṭaiyuka muṭivu eṉum kālam ōrntu ayal
puṭaipeyarā neṭuṅ kaṭalum pōlavē.