கம்பராமாயணம் 5012 · சுந்தர 3.130

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆவது ஆகிய தன்மைய அரக்கனை, அரக்கர்
கோ எனாநின்ற குணம் இலி இவன் எனக் கொண்டான்;
காவல் நாட்டங்கள் பொறி உகக் கனல் எழக் கனன்றான்;
'ஏவனோ இவன்? மூவரின் ஒருவனாம் ஈட்டான்! '

பொருள் · Meaning in Tamil

மூவரின் - மும்மூர்த்திகளில்; ஒருவன் ஆம் எனும் - ஒப்பற்ற சிவபிரான் ஒப்பாவான் என்று கூறப்படும்; ஈட்டான்- வலிமையுடைய அனுமன்; ஆவது ஆகிய தன்மைய - அப்படிப்பட்ட தன்மையுடைய; அரக்கனை - அரக்கனாய கும்பகருணனை; இவன் ஏவனோ - இவன் யாரோ (என ஐயுற்று); அரக்கர் கோ எனா - அரக்கர்களின் தலைவன் என்று; நின்ற - நிலைபெற்றுள்ள; குணம் இலி - பண்பற்றவன்; இவன் எனா - இவன் என்று; கொண்டான் - மனத்திலே எண்ணிக் கொண்டு; காவல் நாட்டங்கள் - உலகைப் பாதுகாக்கும் கண்கள்; பொறி உக - நெருப்புப் பொறி பறக்க; கனல் என - தீயைப் போன்று; கனன்றான் - சினங் கொண்டான்.

பிறர் அரக்கனை இராவணன் என்று கருதியதாகவும், பிறகு மூவரில் (இராவணன், கும்பன், மேகநாதன் யாவர் என்று எண்ணியதாகவும் கூறுவர் வை.மு.கோ. இவன் திரிமூர்த்திகளுள் யாராயினும் ஒருவன் என்று சொல்லத்தக்க பெருமை உடையவனான அனுமன் என்று இறுதியடிக்கு உரை வகுத்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. That demon of such a nature — 'This is the king of the demons,
  2. the one without virtue,' so he took him to be;
  3. his watchful eyes shot sparks, and he blazed up like fire;
  4. 'Who is this?' — he whose might would rank him with the Three.

What the poem says

At first Aṉumaṉ takes the sleeping giant for Irāvaṇaṉ himself, the wicked king of the demons, and blazes with anger, sparks flying from his eyes.

Then doubt creeps in and he asks himself who this really is. The commentary says Aṉumaṉ is so mighty that he could be counted among the three great gods. It also reports an older view that he was wondering which of three demons this might be.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āvatu ākiya taṉmaiya arakkaṉai, arakkar
kō eṉāniṉṟa kuṇam ili ivaṉ eṉak koṇṭāṉ;
kāval nāṭṭaṅkaḷ poṟiyukak kaṉal eṉak kaṉaṉṟāṉ;
'ēvaṉō ivaṉ? mūvariṉ oruvaṉām īṭṭāṉ! '