கம்பராமாயணம் 5013 · சுந்தர 3.131
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மற்று - பிறகு; குறுகிநோக்கி - (அரக்கனை நெருங்கிப் பார்த்து; அவன் - அந்த இராவணனுக்கு அடையாளமான; ஒருபது தலையும் - பத்துத் தலைகளும், குறித்த - கணக்கிட்ட; இறுகு - செறிவைப் பெற்றுள்ள; இருபது திண்புயமும் - இருபது தோள்களும்; இவற்கு இலை - இந்த அரக்கனுக்குக் கிடையாது; என்னா - என்று ஆராய்ந்து அறிந்து (அனுமன்); மறுகி - உள்ளம் கலங்கி; ஏறிய - மேலும் மேலும் பெருகி வருகின்ற; முனிவு எனும் - கோபம் என்கின்ற; வடவை வெங்கனலை - கொடிய வடவைத் தீயை; அறிவு எனும் - ஞானம் என்கின்ற; பெரும் - பெருமையுடைய; அம் - அழகிய, பரவைப் புனலினால் - கடலின் தண்ணீரினால்; அவித்தான் - அணைத்தான்.
எதிரே இருப்பவன் இராவணன் என்று கருதியபோது உண்டாகிய சீற்றம் (இராவணன் அல்லன் என்ற போது) அவிந்தது. இராவணன் செய்த தீச்செயலால் அனுமன் அவன்பால் சீற்றம் கொண்டான். வெறும் புல்லர் தீமையை வேரற்றொழிக்கும்..... கொடும் சினம் மாசற்றார் கோள் (உரைச் சூத்திரம்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Coming close and looking: 'The ten heads that are his, and the
- twenty firm, strong arms that mark him out — this one has not!' he said,
- and the fierce undersea fire of anger that had surged up in his turmoil
- he quenched with the lovely waters of the great ocean of wisdom.
What the poem says
Aṉumaṉ goes closer and sees that the sleeper does not have Irāvaṇaṉ's famous ten heads and twenty arms.
Realising his mistake, he puts out the anger that had flared in him like the fire beneath the sea, using the vast ocean of his wisdom. His fury had been aimed at Irāvaṇaṉ for his wicked deeds, not at this sleeper.