கம்பராமாயணம் 5014 · சுந்தர 3.132
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இராகவன் புகழினை - இராமபிரானுடைய கீர்த்தியை; செவிக்குத் தேன் என - செவிகட்குத் தேன் போல; திருத்தும் - பரிமாறுகின்ற; கவிக்கு நாயகன் - வானரர்களின் தலைவனாகிய அனுமன்; அவித்து நின்று - கோபக்கனலைத் தணித்துக் கொண்டு; எவன் ஆயினும் ஆக - இங்கேயிருப்பவன் யாவன் ஆயினும் ஆகட்டும்; என்று - என்று எண்ணி; அங்கை கவித்து - அகங்கையைப் புறங்கை ஆக்கி; நீங்கிட சிலபகல் - இறப்பதற்குச் சில நாள்களே உள்ளன; என்பது கருதா - என்பதை மனத்திலே எண்ணி; அனையவன் - அந்த கும்பகருணனின்; உறையுளை - மாளிகையை; கடந்தான் - புறந்தள்ளிச் சென்றான்.
இராகவன் புகழினைத் தன் செவிக்கும் பிறர் செவிக்கும் பரிமாறும் அனுமன். திருத்துதல் - பரிமாறுதல். செம்மையாக்குதல் என்றும் கூறலாம். எவ்விடத்தும் ராமன் சரிதையாம் - அவ்விடத்தினும் அஞ்சலி யத்தனாய் இருந்து இராமகாதை கேட்பவன் அனுமன் ஆதலின், புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன் என்றான். திருத்துதல் - கறி திருத்துதல் என்பதுபோலப் பக்குவம் செய்தலாம். உறையுள் - தங்குமிடம். கிட - இகழ்ச்சிக் குறிப்பு. இப்பாடல் பின்னிரண்டு வரிகள் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் பொருந்தும் என்பர் சான்றோர். கம்பனுக்குக் கொள்ளுங்கால் திருத்தும் என்பது செம்மைப்படுத்தல் என்பது பொருள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Quenching his wrath he stood; saying, 'Let him be whoever he may!', he turned his palm down,
- thinking, 'Only a few days remain before he goes!'
- he who serves out Irākavaṉ's fame like honey to the ears,
- the lord of the monkeys, passed beyond that one's dwelling.
What the poem says
Aṉumaṉ, searching Ilaṅkai by night for Cītai, has come upon the giant Kumpakaruṇaṉ asleep, and his first anger at the sight cools. Whoever this is, he thinks, his days are numbered, and with a dismissive turn of the hand he moves on.
Aṉumaṉ is called the one who serves Irāmaṉ's fame like honey to the ears, since he is the devotee who listens wherever Irāmaṉ's story is told. Readers have long noted that the last two lines fit the poet Kampaṉ himself just as well: he too is the master poet who refines and polishes Irāmaṉ's fame.