கம்பராமாயணம் 5015 · சுந்தர 3.133

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாட கூடங்கள், மாளிகை ஓளிகள், மகளிர்
ஆடு அரங்குகள், அம்பலம், தேவர் ஆலயங்கள்,
பாடல் வேதிகை, பட்டிமண்டபம், முதல் பலவும்
நாடி ஏகினன், இராகவன் புகழெனும் நலத்தான்.

பொருள் · Meaning in Tamil

இராகவன் புகழ் எனும் நலத்தான் - இராமபிரானின் கீர்த்தியின் வடிவமான அனுமன்; மாட கூடங்கள் - மாடகூடங்களையும்; மாளிகை ஒளிகை - மாளிகை வரிசைகளையும்; மகளிர் ஆடு அரங்குகள் - பெண்கள் விளையாடும் மேடைகளையும்; அம்பலம் - சபைகளையும்; தேவர் ஆலயங்கள் - கடவுளர் கோவில்களையும்; பாடல் வேதிகை - இசையரங்குகளையும்; பட்டி மண்டபம் - விவாத மேடைகளையும்; முதல் - இவை முதலான; பலவும் - பலவற்றையும்; நாடி - (பிராட்டியைத்) தேடி; ஏகினன் - சென்றான்.

இராமபிரானின் புகழின் வடிவமான அனுமன், மாடகூடங்கள் முதலானவற்றைத் தேடிச் சென்றான். இராமபிரானின் புகழையே எப்போதும் அனுமன் சிந்தித்தபடி இருத்தலின் அவனை இராமபிரானின் புகழாகவே கவிஞன் இசைத்தான். ஒளிகை - வரிசை. அம்பலம் - பலர்கூடும் இடம். வேதிகை - மேடை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Towered halls, rows of mansions, the stages where
  2. women dance, public halls, temples of the gods,
  3. music platforms, halls of debate, and many more besides
  4. he searched as he went, he whose goodness was Irākavaṉ's fame itself.

What the poem says

Aṉumaṉ continues his search through Ilaṅkai, going through every kind of building in the city: palaces, halls for dancing and music, assembly halls, temples and halls where scholars debated.

The poet calls him the very embodiment of Irāmaṉ's fame, because Aṉumaṉ's mind dwells on that fame at every moment. The list also shows how rich and fully furnished the demon city is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṭa kūṭaṅkaḷ, māḷikai ōḷikai, makaḷir
āṭu araṅkukaḷ, ampalam, tēvar ālayaṅkaḷ,
pāṭal vētikai, paṭṭimaṇṭapam, mutal palavum
nāṭi ēkiṉaṉ, irākavaṉ pukaḻ eṉum nalattāṉ.