கம்பராமாயணம் 5016 · சுந்தர 3.134

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மணிகொள் வாயிலில், சாளரத் தலங்களில், மலரில்,
கணிகொள் நாளத்தில், கால் எனப் புகை எனக் கலக்கும்,
நுணுகும், வீங்கும், மற்று அவன் நிலை யாவரே நுவல்வார்?
அணுவின் மேருவின் ஆழியான் எனச் செலும் அறிவோன்.

பொருள் · Meaning in Tamil

ஆழியான் என - சக்கரப்படை ஏந்திய திருமாலைப் போல; அணுவின் - சிறிய அணுவின் கண்ணும்; மேருவின் - பெரிய மேருமலையின் கண்ணும்; செலும் அனுமன் - ஊடுருவிச் செல்ல வல்ல அனுமன்; மணிகொள் வாயிலில் - மணிகள் பதிக்கப்பெற்ற வாசல்களிலும்; சாளரத் தலங்களில் - பலகணி இடங்களிலும்; மலரில் - பூவின் கண்ணும்; கணிகொள் நாளத்தில் - நுட்பமான பூக்களின் தண்டின் கண்ணும்; கால் என - காற்றைப் போலவும்; புகை என - புகையைப் போலவும்; கலக்கும் - ஒன்று படுவான்; நுணுகும் - நுட்பமாகுவான்; வீங்கும் - பருமன் ஆகுவான்; அவன் நிலை - அந்த அனுமனின் நிலைமையை; நுவல்வார் - உள்ளபடி எடுத்துக் கூறவல்லவர்; யாவரே - எவர்?

மலரின்கண்ணும், மலர்த்தண்டின் கண்ணும் புகைபோலக் காற்றைப் போல ஒன்றுபட்டுத் தேடினான் அனுமன். திருமால், மேருமலையிலும், அணுவிலும் அந்தர்யாமியாய் இருப்பான். அதுபோல் அனுமன் பெரும் பொருளிலும் சிறிய பொருளிலும் கலந்துள்ளான் என்க. நம்பிள்ளை, “பரமாணுக்கள் தோறும் நிறைந்திருப்பான். ஓர் அண்டத்தைச் சமைத்து அவ்வண்டத்தில் ஒருவனைத் தனியாக வைத்தது போன்று இருப்பான்,” என்று வரைந்தார் (திருவாய் 1, 1, 10). தூணிலும் உளன்... கோணிலும் உளன் என்பது பிரகலாதனின் உறுதிப்பாடு. (கம்ப. 6312)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Through jewelled doorways, through the spaces of latticed windows, into flowers,
  2. into the slender stalks of blossoms, like wind, like smoke, he merges in;
  3. he shrinks, he swells; who could tell the state he was in?
  4. Aṉumaṉ, who goes into the atom and into Mēru like the Lord of the discus.

What the poem says

Aṉumaṉ searches every corner, changing his size at will. He slips like wind or smoke through doorways and windows, even into flowers and their thin stems, then grows large again. No one could describe how he moves.

He is compared to Tirumāl, the god who holds the discus and lives within everything, from the smallest atom to the great mountain Mēru. In the same way Aṉumaṉ can enter the smallest and the largest things. The commentary recalls Pirakalātaṉ's belief that the Lord is present even in a pillar.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇikoḷ vāyilil, cāḷarat talaṅkaḷil, malaril,
kaṇikoḷ nāḷattil, kāl eṉap pukai eṉak kalakkum,
nuṇukum, vīṅkum, maṟṟu avaṉ nilai yāvarē nuvalvār?
aṇuviṉ mēruviṉ āḻiyāṉ eṉac celum aṉumaṉ.