கம்பராமாயணம் 5017 · சுந்தர 3.135
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏந்தல் - அன்பர்களைப் பாதுகாக்கும் அனுமன்; காந்தள் மெல்விரல் - காந்தள் இதழ்போன்ற மெல்லிய விரல்களைப் பெற்ற; மடந்தையர் யாரையும் - பெண்கள் யாவரையும்; காண்பான் - காணும் பொருட்டாக; இவ்வகை - (நுணுகிப் பெருகி) இப்படி; எவ்வழி மருங்கினும் - எல்லா இடங்களிலும்; எய்தி - அடைந்து; வேந்தர் வேதியர் - அரசர்களும் அந்தணர்களும்; மேல் உளோர் - தேவர்களும்; கீழ் உளோர் - நாகலோகத்தவர்களும்; விரும்ப - விருப்பம் கொள்ளும்படி; போந்த புண்ணியன் - அவதரித்த வீடணனின்; கண் அகன் - இடம் அகன்ற; கோயிலுள் புக்கான் - அரண்மனைக்குள் நுழைந்தான்.
அனுமன், மகளிர் யாவரையும் ஆராய்ந்து காண்பதற்காக, எல்லா இடங்களிலும் தேடி வீடணனின் அரண்மனையை அடைந்தான். ஏந்தல் - அன்பர்களை ஏந்துபவன் (காரணப் பெயர்). காந்தள் மலரைக் குறிக்காது இதழைக் குறித்தது ஆகுபெயர். மலர் கைக்கும், இதழ் விரலுக்கும் உவமையாகும். புண்ணியன் என்று வீடணனைக் குறித்தது போற்றி உணரத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The noble one, reaching in this way every quarter on every side,
- to see every woman whose soft fingers are like kāntaḷ petals,
- entered the wide palace of the virtuous one who came into the world
- so that kings, priests, those above and those below might love him.
What the poem says
Still looking at every woman in the city in case she is Cītai, Aṉumaṉ reaches the palace of Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's younger brother.
The poet calls Vīṭaṇaṉ simply the virtuous one, born so that kings, priests, the gods above and the serpent folk below would all cherish him. This marks him out at once from the other demons. The women's fingers are compared to the petals of the kāntaḷ (glory lily).