கம்பராமாயணம் 5018 · சுந்தர 3.136

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அனுமன்) கருநிறத்தோர்பால் - கரிய நிறமுடைய அரக்கர்களின் நடுவில்; வெளித்து - வெண்ணிறம் கொண்டு (வெளிப்படையாக); வைகுதல் அரிது என - வாழ்வது கடினம் என்று கருதி; அவர் உரு மேவி - அவ்வரக்கர்களின் கரிய வடிவத்தை அடைந்து; பவளத்தின் கூடத்து - பவளத்தால் செய்யப்பட்ட கூடத்திலே; பசுந்தேன் துளிக்கும் - பசுமையான தேன் சிதறுகின்ற; கற்பகப் பந்தரில் - கற்பகப் பந்தலின் அடியில்; பளிக்கு வேதிகை - பளிங்காலமைந்த மேடையில்; ஒளித்து - மறைத்து; வாழ்கின்ற - வாழும்படியான; தருமம் அன்னான்தனை - தருமம் போன்ற வீடணனை; உற்றான் - அணுகிப் பார்த்தான். அறத்தின் நிறம் வெண்மை என்பது இலக்கிய வழக்கு. இராமபிரானின் பல்லின் வெண்மையைப் பேசவந்த அனுமன், ‘துறையறத்தின் வித்து முளைத்த அங்குரம் கொல்” என்று பேசினான் (கம்ப. 5280) “ஆரருள் சுரக்கும் நீதி அறம் நிறம் கரிதோ” (கம்ப. 6492) எனப் பின் வருவதும் இங்கு கருதுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On a crystal platform, in a hall of coral, beneath a bower of the wishing tree
  2. that drips fresh honey, he came upon one like Dharma itself,
  3. which, thinking it hard to live openly and white among the dark-skinned,
  4. had taken on their form and lived there in hiding.

What the poem says

Aṉumaṉ finds Vīṭaṇaṉ resting on a crystal dais under a honey-dripping bower of the heavenly wishing tree.

The poet pictures him as Dharma, righteousness itself, which in literature is white. Living among the black demons, it would be hard for Dharma to show itself openly, so it has put on a demon's dark body and lives there in disguise. Later in the epic the question comes up again, when someone asks whether the colour of Dharma could really be black.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paḷikku vētikaip pavaḷattiṉ kūṭattup pacuntēṉ
tuḷikkum kaṟpakap pantaril, karu niṟattōrpāl
veḷittu vaikutal aritu eṉa, avar uru mēvi,
oḷittu vāḻkiṉṟa tarumam aṉṉāṉtaṉai uṟṟāṉ.