கம்பராமாயணம் 5019 · சுந்தர 3.137

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உற்று நின்று அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான்,
குற்றம் இல்லதோர் குணத்தினன் இவன், எனக் கொண்டான்,
செற்றம் நீங்கிய மனத்தினன், ஒருசிறை சென்றான்.
பொற்ற மாடங்கள் கோடி ஓர் நொடி இடைப் புக்கான்.

பொருள் · Meaning in Tamil

உற்று நின்று - (வீடணனை) அணுகியிருந்து; அவன் உணர்வை - அந்த வீடணனின் உணர்ச்சியை; தன் உணர்வினால் - தன்னுடைய ஆய்வுணர்வால்; உணர்ந்தான் - அறிந்து கொண்டு; இவன் - இங்கே உறங்கும் இவன்; குற்றம் இல்லது - குற்றங்கள் இல்லாத; ஓர் குணத்தினன் - ஒப்பற்ற குணமுடையவன்; எனக் கொண்டான் - என்று தெரிந்து கொண்டு (அதனால்); செற்றம் நீங்கிய - பகைமை விலகிய; மனத்தினன் - உள்ளத்தை உடைய அனுமன்; ஒருசிறைச் சென்றான் - வேறொரு வழியிலே போய்; பொற்றை மாடங்கள் கோடி - மலைகள் போன்ற மாடங்கள் கோடியளவானவை; ஓர் நொடி இடை - ஒருமுறை கைநொடிக்கும் நேரத்துள்; புக்கான் - புகுந்து பார்த்தான்.

ஒருத்தி தன் உணர்ச்சியைப் பிறவற்றில் செலுத்திப் பார்ப்பதை வடநூலார் “ஸம்யக் ஞானம்” என்பர். (விவேகானந்தர் ராஜயோகம் யோக சூத்திரம் விபூதிபாதம்). செற்றம் - நீங்காச் சினம் - ‘இகலொடு செற்றம் நீங்கிய மனத்தினர்’ என்பர் நக்கீரர். பொற்றை - மலை. பொற்றைமாமுழைப் புலாலுடைவாய் (ஆரண்ய. கரன் 135). நொடி - கை நொடிக்கும் நேரம். ஒரு மாத்திரை அளவு. குற்றெழுத்து உச்சரிக்கும் காலம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Standing close, he read that one's mind with his own mind;
  2. he judged, 'This is a man of rare virtue without a flaw,'
  3. and with his mind freed of hostility he went off another way,
  4. and in a single snap of the fingers entered a crore of mountain-like mansions.

What the poem says

Standing near the sleeping Vīṭaṇaṉ, Aṉumaṉ uses his own power of insight to sense what kind of mind the demon has. He sees that this is a man of flawless character, so the hostility he feels toward the demons falls away in this one case.

He moves on, and in the time it takes to snap one's fingers he has searched a crore of towering mansions. The commentary compares this reading of another's mind to the yogic insight described in Sanskrit texts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṟṟu niṉṟu avaṉ uṇarvait taṉ uṇarviṉāl uṇarntāṉ,
kuṟṟam illatōr kuṇattiṉaṉ ivaṉ, eṉak koṇṭāṉ,
ceṟṟam nīṅkiya maṉattiṉaṉ, oruciṟaic ceṉṟāṉ.
poṟṟai māṭaṅkaḷ kōṭi ōr noṭiyiṭaip pukkāṉ.