கம்பராமாயணம் 5020 · சுந்தர 3.138

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முந்து - முதன்மையான (சிறந்த); அரம்பையர் முதலினர் - அரம்பையர் முதலான; முழுமதி முகத்து - பூரண சந்திரனைப் போன்ற முகத்தையும்; சிந்துரம் பயில் வாய்ச்சியர் - செந்நிறம் மிக்க வாயையும் உடைய; பலரையும் - பல பெண்களையும்; தெரிந்து - (இவர்கள் பிராட்டியோ என்று) ஆராய்ந்து; பல மந்திரம் கடந்து - பல அரண்மனைகளைத் தாண்டி; தன் - தன்னுடைய; மனத்தின் முன் - மனத்தைவிட முன்னோக்கி; செல்வான் - வேகமாகச் செல்லும் அனுமன்; இந்திரன் சிறை இருந்த - இந்திரன் சிறைக் கைதியாயிருந்த; வாயிலின் கடை - சிறைச்சாலையின் முன்புறத்தை; எதிர்ந்தான் - எதிரே கண்டான்.

(அனுமன்) அரம்பையர் முதலான மகளிரைத் தேடிச் செல்லும் அனுமன் இந்திரன் கைதியாயிருந்த சிறைக் கோட்டத்தின் முற்றத்தை அடைந்தான். முழுமதி முகத்துச் சிந்துரம்பயில் வாய்ச்சியர் என்னும் நீள்தொடர் மகளிர் என்னும் சுருங்கிய பொருள் தந்து நிற்கின்றது. இனியர், தம் உரையில் இத்தகைய தொடரைச் சுட்டுப் பொருள் தந்ததென்றார். மந்திரம், வீடன்று. அரண்மனை. மாளிகை, சாலை. மந்திரம் பவனம் - கோயில் என்ப குலமும் அதற்கே (பிங்கலம். ஆலய வகை 652) சிறையிருப்பார் எப்போதும் வாயிலையே நோக்கியிருத்தலின் சிறையிருந்த வாயிலின்கடை என்று பேசப்பட்டது. அனுமன் மனத்தைவிட வேகமாகச் சென்றான். வாயுவேகம், மனோவேகம் என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking closely at many women, the foremost celestial nymphs and others,
  2. with faces like the full moon and mouths rich with vermilion red,
  3. passing many palaces, going on ahead even of his own mind,
  4. he came face to face with the gate where Intiraṉ had been held prisoner.

What the poem says

Aṉumaṉ studies one beautiful woman after another, among them celestial dancers whom Irāvaṇaṉ has taken, checking whether any is Cītai. Moving faster than thought, he comes to the gateway of the prison where Intiraṉ, king of the gods, was once held captive by the demons.

The gate is mentioned because a prisoner always fixes his eyes on the gate of his prison. Aṉumaṉ's speed is said to outrun the mind, as the saying "swift as wind, swift as thought" puts it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muntu arampaiyar mutaliṉar, muḻumati mukattuc
cinturam payil vāycciyar, palaraiyum terintu,
mantiram pala kaṭantu, taṉ maṉattiṉmuṉ celvāṉ,
intiraṉ ciṟaiyirunta vāyiliṉkaṭai etirntāṉ.