கம்பராமாயணம் 5023 · சுந்தர 3.141

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வளையும் வாள் எயிற்று அரக்கனோ? கணிச்சியான் மகனோ?
அளையில் வாள் அரி அனையவன் யாவனோ? அறியேன்!
இளைய வீரனாம் ஏந்தலும் இவனுடன் நெடுநாள்
உளைய உள்ளபோர் உளது! என, உள்ளத்தின் உணர்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

அளையில் வாள் அரி அனையவன் - குகையில் உறங்கும் கொடுஞ்சிங்கம் போன்ற இவ்வீரன்; வளையும் வாள் எயிறு - வளைந்த ஒளியுள்ள பற்களையுடைய; அரக்கனோ? - அரக்கர் குலத்தவனோ (அன்றேல்); கணிச்சியான் - மழுப்படை ஏந்திய சிவபிரானின்; மகனோ? - புதல்வனாகிய முருகப் பெருமானோ? யாவனோ - எவனோ (யாரென); அறியேன் - அறியாமல் உள்ளேன் (ஆனால்); இளைய வீரனும் - இளமைப் பருவமுடைய இலக்குவனும்; ஏந்தலும் - சரண் புக்காரைக் காக்கும் இராமபிரானும் (ஆகிய); இருவரும் - இரண்டு மகா வீரர்களும்; உளைய - மன உளைச்சல் அடையும்படி; உள்ள போர் - இனி நிகழக்கூடிய யுத்தம்; பல நாள் - பல நாள்கள்; இவனொடும் - இந்த வீரனுடன்; உளது - நிகழப் போகிறது; என - என்ற உண்மையை; உணர்ந்தான் - அறிந்தான்.

கணிச்சி - மழு. கணிச்சி மணிமிடற்றோன் (புறம் 56) அளை - குகை. இவனை யார் என அறியேன். ஆனால் இவன் போர் வல்லான் என்பதை அறிகிறேன், என்ற அனுமனின் தீர்க்கதரிசனம் கூர்மையானது. ஏந்தல் - சரணாகதி அடைந்தவரை ஏந்துபவன். காரணப்பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Is he a demon with curved, gleaming tusks, or the son of the axe-bearing Lord?
  2. Who is he, like a fierce lion in its cave? I do not know!
  3. But with this one the young hero and the noble one, the two of them,
  4. will have a war that troubles them for many days!' So he perceived.

What the poem says

Looking at the sleeping Intiracittu, Aṉumaṉ cannot tell whether he is a demon or Murukaṉ, son of Civaṉ who bears the battle-axe. He lies like a lion in its den.

Though he does not know who this is, Aṉumaṉ sees at once that this warrior will give Ilakkuvaṉ and Irāmaṉ a hard fight lasting many days. The commentary praises this as a sharp piece of foresight, since Intiracittu will indeed be one of the most dangerous enemies in the war.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaḷaiyum vāḷ eyiṟṟu arakkaṉō? kaṇicciyāṉ makaṉō?
aḷaiyil vāḷ ari aṉaiyavaṉ yāvaṉō? aṟiyēṉ!
iḷaiya vīraṉum ēntalum iruvarum palanāḷ
uḷaiya uḷḷapōr ivaṉoṭum uḷatu! eṉa uṇarntāṉ.