கம்பராமாயணம் 5024 · சுந்தர 3.142
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சிவனை - சிவபெருமானும்; நான்முகத்து ஒருவனை - நான்கு முகம் கொண்ட பிரம்மதேவனும்; திருநெடுமாலாம் அவனை - திருமால் என்று புகழப்படும் அவனும்; அல்லவர் - அல்லாத தேவர்கள் (இவனை); நிகர்ப்பவர் என்பதும் - ஒப்பாவார் என்று கூறுவதும்; அறிவோ - அறிவாகுமா? இவனை - இந்த வீரனை; இன் துணையுடைய - நல்ல உதவியாளனாகப் பெற்ற; போர் இராவணன் - போர் விருப்பம் பெற்ற இராவணன்; புவனம் மூன்றையும் - மூன்று உலகங்களையும்; வென்றது - வெற்றி கொண்டது; ஓர் பொருள் எனப் புகறல் - ஒரு அருஞ்செயல் என்று கூறுவது; என்னே - என்ன அதிசயம்.
மும்மூர்த்திகட்குச் சமமான வீரனைத் துணையாகப் பெற்ற இராவணன் மூன்று உலகத்தை வென்றது செயற்கரும் செயலன்று. சிவனை, ஒருவனை, அவனை - என்பதில் உள்ள ‘ஐ’ வேற்றுமையன்று. அசை. நாடார் புகழாளை - கூறி, என்ற (சிந். 26 பதி) இடத்தில் புகழாள் - விசயை, ஐ - அசை என்று இனியர் குறித்தார். பொருள் - செயல். “ஒரு பொருள் சொல்லுவதுடையேன்” (கலி. 8) என்ற இடத்தில் இனியர் வரைந்ததைக் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With this one as his dear ally, how can anyone speak of
- war-loving Irāvaṇaṉ's conquest of the three worlds as a great deed?
- And is it wisdom to say that any but Civaṉ, the one of four faces,
- and the glorious tall Māl could be this one's equal?'
What the poem says
Aṉumaṉ goes on thinking about the sleeping Intiracittu. With a son like this fighting beside him, Irāvaṇaṉ's conquest of the three worlds is no great wonder.
Only the three great gods, Civaṉ, Piramaṉ the four-faced creator and Tirumāl, could be called this warrior's equals. No lesser god could. This is the respect of one great fighter for another, and it prepares us for the fierce battles of the war book.