கம்பராமாயணம் 5025 · சுந்தர 3.143
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று - என்று (இந்திரசித்தனைப் புகழ்ந்து) கூறி; கைமறித்து - இது இப்படி இருக்கட்டும் என்று கையை அசைத்து; இடை நின்று காலத்தை - தனக்கும் தேடத் தகும் பிராட்டிக்கும் நடுவில் நின்ற காலத்தை (புகழ்வதில்); இகப்பது - கடத்துவது; அன்று - தகாது; போவது - தேடிச் செல்வது (நல்லது); என்று - என்று கருதி; இந்திர சித்தனைத் தீர்ந்தான் - இந்திர சித்தனை நீங்கி; ஆயிரம் ஆயிரத்து அடங்கா - ஆயிரத்தால் பெருக்கப்பட்ட ஆயிரம் என்னும் எண்ணிக்கையில் அடங்காமல்; துன்று - நெருங்கியுள்ள; மாளிகை ஒளிகள் - மாளிகை வரிசைகளை; துரிசு அற - குற்றங்கள் இல்லாமல்; துருவிச் சென்று - ஊடுருவிப் போய்; தேடினன் - தேடிப் பார்த்தான்.
கைமறித்தல் - சரி மேலே ஆவன செய்வோம் என்னும் பொருளை உணர்த்தும் கரச்செயல். கைமறித்தல், கவிச்சக்கரவர்த்தி விரும்பும் சொல். துருவி, தேடினன் - என்ற தொடர் ஆழமானது. துருவுதல் ஊடுருவிப் பார்த்தல். கவிச்சக்கரவர்த்தி இதனைத் தேடுதல் என்னும் சாதாரணப் பொருளிலும், ஊடுருவிப் பார்த்தல் என்னும் சார்புப் பொருளிலும் பேசுவார். ‘துருவுமாமணி ஆரம்” (கம்ப. 1105) என்ற இடத்தில் துளையிடுதல் என்னும் பொருள் தந்தது. அதன் சார்புப் பொருளே ஊடுருவல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So saying, he waved his hand: 'To stand here letting time slip by
- will not do; I must go on!' And through rows of crowded mansions,
- more than a thousand thousand, probing them through without a fault,
- he went and searched, leaving Intiracittu behind.
What the poem says
Aṉumaṉ catches himself admiring Intiracittu. With a wave of the hand that means 'enough of that', he reminds himself that every moment spent here is a moment lost in the search for Cītai.
He leaves the prince and sweeps through more than a million crowded mansions, searching each one thoroughly. The word used for searching also means boring through or piercing, so it suggests that nothing escapes his gaze.